Top 10 TRP : அதிரடி.. சரவெடி.. மளமளவென முன்னுக்கு வந்த 'எதிர்நீச்சல்! செம்ம டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொடர்!
இந்த வருடத்தின் மூன்றாவது வாரத்தில் TRP-யில் டாப் 10 இடத்தை தக்க வைத்து கொண்ட சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சிங்க பெண்ணே:
ஆனந்தி, அன்பு தான் தன்னை காதலிப்பது என்பதை புரிந்து கொண்டு... அன்புவை காதலித்து கரம் பிடிப்பாரா? அல்லது மகேஷை திருமணம் செய்து கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 11.8 புள்ளிகளுடன் TRP-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கயல்
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் கயல்... சாக வேண்டும் என சிலர் நினைத்தாலும், அனைத்தையும் தாண்டி கயல் கண்முழிப்பாரா? அவருக்கு யார் உதவ முன்வருவார் என்கிற ட்விஸ்டுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரம், 10.28 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
Ethirneechal
எதிர்நீச்சல்:
கடந்த 2 மாதமாகவே TRP-யில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்ட 'எதிர்நீச்சல் சீரியல்' தர்ஷினியின் கடத்தல் சம்பவத்தால், பரபரப்பான காட்சிகளுடன் மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது. இந்த தொடர்ந்து இந்த வாரம் 9.19 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
வானத்தைப்போல:
வழக்கமாக டாப் 3 இடங்களை தக்க வைத்து கொள்ளும் இந்த தொடர், இந்த முறை 4-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பொன்னி துளசியை கொலைசெய்வரா? அதனை சின்ராசு மற்றும் ராஜ பாண்டி எப்படி தடுப்பார்கள் என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் 8.76 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.
இசையின் வாரிசுக்கு பிரியாவிடை.! அம்மா - பாட்டி நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டார் பவதாரிணி!
sundhari
சுந்தரி:
TRP-யில் 5-ஆவது இடத்தில், உள்ளது சுந்தரி தொடர். ஆசிரமத்தில் நடக்கும் உள்ளுறுப்பு திருட்டு பற்றி தெரிந்து கொள்ள தன்னுடைய அப்பத்தாவையே ஆசிரமத்திற்கு சுந்தரி அனுப்பி உள்ள நிலையில், அப்பத்தா மீது சந்தேகம் உள்ளதால் அவரை தீர்த்து கட்ட, முயற்சி நடக்கிறது. இதனை தடுத்து சுந்தரி அப்பத்தாவை காப்பாறுவாரா? என்கிற பரபரப்பான தருணத்தில்... இந்த தொடர் 8.76 TRP புள்ளிகளுடன் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை:
விஜய் டிவி தொடரான சிறகடிக்க ஆசை தொடர் தான் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில்... ரோகினி சொன்ன பொய்யை மறைக்க பல பித்தலாட்ட வேலைகளை செய்ய எப்போது சிக்குவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தொடர், 8.49 TRP புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதிர்ச்சி... பதறி போன சிவகார்த்திகேயன்! 'அயலான்' பட பிரபலம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Iniya Serial
இனியா:
சன் டிவி தொடரான இனியா சீரியல் தான் டாப் 10 TRP லிஸ்டில் 7-ஆவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. அக்ஷயா பற்றிய உண்மை.. தன்னுடைய கணவருக்கு தெரியாமல் இனியா மறைத்து வரும் நிலையில் இதற்க்கு பல சங்கடங்கள் வருகிறது. இந்த தொடர் 7.34 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.
பாக்கியலட்சுமி:
மஹாசங்கமமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடர், பழையபடி கொஞ்சம் பரபரப்பு குறைந்து... அமைதியாக சென்று கொண்டிருப்பது போல் தெரிகிறது. இந்த தொடர், 6.89 TRP புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆனந்த ராகம்:
எப்படியும் ஈஸ்வரியை தீர்த்து கட்ட வேண்டும் என்றும், அவரை ஜெயிலுக்கு அனுப்பவும் சில சதிவேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்... இந்த தொடர் 6.22 TRP புலிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆஹா கல்யாணம்:
விஜய் டிவியில் காதல், சண்டை, குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் தொடர் பல இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக உள்ளது. இந்த சீரியல் 5.85 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தி பிடித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.