அதிர்ச்சி... பதறி போன சிவகார்த்திகேயன்! 'அயலான்' பட பிரபலம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
'அயலான்' பட தயாரிப்பாளர் கே.ஜி.ஆர்.ராஜேஷ், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்.. சிவகார்த்தியேன் உட்பட அயலான் பட குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Ayalaan movie
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அயலான்'. வேற்றுக்கிரகவாசி கதைக்களத்தை மையப்படுத்தி சயின்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்தாலும், கலவையான விமர்சனங்களை பெற்றதால், இதுவரை சுமார் 75 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
Ayalaan
படத்தின் பட்ஜெட்டை விட குறைந்த அளவிலான வசூல் மட்டுமே கிடைத்துள்ளதால் பட குழுவினர் கடும் அப்சட்டில் உள்ளனர். இதை தொடர்ந்து படக்குழுவினருக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கனத்த இதயத்துடன் அன்பு மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா - கலங்க வைக்கும் புகைப்படம்
Ayalaan Movie Team
அதாவது அயலான் பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கே.ஜி.ஆர் நிறுவனத்தின், தலைவர் ராஜேஷ் திடீர் என ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை ராஜேஷுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த தகவல் அயலான் பட குழுவினரையும், திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
'அயலான்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை 24:00 a.m ஸ்டுடியோஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.