தேனி அருகே உள்ள பண்ணையபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பாடகி பவதாரணியின் உடலுக்கு இசைஞானி இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று முன்தினம் (ஜனவரி 25) மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக ஆயுர்வேத சிகிச்சை எடுக்க இலங்கை சென்றபோது அங்கு அவர் உயிர் பிரிந்தது. பவதாரிணியின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் இருந்து நேற்று மாலை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சென்னையில் இருந்து தேனி அருகே உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணையபுரத்திற்கு பவதாரணியின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்குள்ள கிராம மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பவதாரிணி உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். அந்த பண்ணையபுரத்தில் உள்ள இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணையில் பவதாரிணியின் உடலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Rajinikanth: பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த பண்ணைபுரம் செல்கிறாரா ரஜினிகாந்த்? PRO வெளியிட்ட உண்மை!

Bhavatharini Death | பாடகி பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி!

இந்த நிலையில், பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் பாரதிராஜா, அவரின் உடலை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் தன்னுடைய நண்பன் இளையராஜாவை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் டிரம்ஸ் சிவமணி வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கனத்த இதயத்துடன் தன் மகளின் உடலுக்கு அருகே வந்த இளையராஜா, அன்பு மகளின் உடலை பார்த்தபடியே உடைந்து நின்றது அங்கிருந்தவர்களை கலங்க செய்தது. பின்னர் அவரது உறவினர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். அன்பு மகளுக்கு இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தியபோது எடுத்த புகைப்படம் காண்போரை கண்கலங்க செய்யும் வகையில் உள்ளது.

Bhavatharini Funeral | தாய், மனைவியை அடக்கம் செய்த அதே இடத்தில் மகளின் உடல் அடக்கம் - இளையராஜா..!

இதையும் படியுங்கள்... Bhavatharini: தன்னுடைய மரணத்தை 10 நாட்களுக்கு முன்பே கணித்தாரா பவதாரிணி? அவர் செய்ததை சொல்லி கதறும் உறவுகள்!