நீ போதும்... காற்று கூட நுழைய முடியாதபடி கட்டியணைத்து காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரியா பவானி ஷங்கர்
நடிகை பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய காதலன் ராஜவேலுவுக்கு ரொமான்டிக்காக பிறந்தநாள் வாழ்ந்து கூறியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Priya Bhavani Shankar
சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியா பவானி சங்கருக்கு, சிறுவயதில் இருந்தே ஜர்னலிஸ்ட்டாக வேண்டும் என்கிற ஒரு கனவு இருந்ததால், பி டெக், எம்பிஏ, படித்து முடித்த பின்னர்... தொலைக்காட்சியில் பணியாற்ற வாய்ப்பு தேட துவங்கினார்.
Priya Bhavani Shankar Movies
அந்த வகையில் இவருடைய அழகும், தமிழ் உச்சரிப்பும் இவரை செய்தி வாசிப்பாளராக மாற்றியது. 2011-ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'கல்யாண முதல் காதல் வரை' சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஆடிஷனில் கலந்து கொண்டார்.
Happy Birthday Priya Bhavani Shankar
இதில் தேர்வான பிரியா பவானி சங்கர், ஒரு வித பயத்துடன் செய்தி வாசிப்பாளர் பணிக்கு குட்பை சொல்லிவிட்டு நடிப்பின் பக்கம் ஒதுங்கினார். இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 5, பிலிம்ஸ் பேர் அவார்ட்ஸ் சவுத், சூப்பர் சிங்கர் சீசன் 5, டான்ஸ் ஆஃப் சீசன் 1, போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
Priya Bhavani
அதிரடியாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வரவே, திரைப்பட வாய்ப்பு காரணமாக தான் நடித்து வந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார் பிரியா பவானி சங்கர். இயக்குனர் ரத்த குமார் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தில் வைபவுக்கு ஜோடியாக இவர் நடித்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், எஸ் ஜே சூர்யாக்கு ஜோடியாக மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபர, ஓ மணப் பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதியாட்டம், என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி சங்கர், நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் ஜீப்ரா, டிமான்டி காலனி 2, ரத்னம், இந்தியன் 2 ஆகிய தமிழ் படங்கள் வெளியாக உள்ளது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் 'பீமா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
34 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடைய காதலருடன் தொடர்ந்து டேட்டிங் செய்து வரும் பிரியா பவானி சங்கர்... இந்த ஆண்டு தன்னுடைய காதலரின் பிறந்த நாளுக்கு மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு, ரொமான்டிக்காக தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். இந்த பதிவும் பிரியா வெளியிட்டுள்ள புகைப்படமும் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த பதில் கூறியுள்ளதாவது, "இதனால் தான் நீ சிறந்தவனாக இருக்கிறாய்... நீ என்னுடைய சிறந்த நண்பன், நாம் சேர்ந்து சிரித்திருக்கிறோம், சேர்ந்து சண்டை போடுகிறோம், சேர்ந்து அழுகிறோம், சேர்த்தே உயர்கிறோம்.
அவன் தப்பான வரிகளை கூட சத்தமாகவும், தன்னம்பிக்கையுடன் பாடுபவன். நாங்கள் இருவரும் A டூ Z வித்தியாசமானவர்கள் தான், ஆனாலும் அவன் என்னை நிறைவு செய்கிறான். நீ என்னுடன் இருக்கும் போது அமைதியாக உணருகிறேன், வேடிக்கையாக உணர்கிறேன், உன்னுடன் அமர்ந்து மிகவும் அமைதியாக அழகான சூரிய அஸ்தமத்தை பார்த்து ரசிக்க முடிகிறது. நீ போதும்... நான் ஆனந்தமாக உலகை கடக்க உன்னைப் பற்றிய கோடி நினைவுகள் உள்ளன என்று, பிரியா பவானி சங்கர் பதிவிட்டு, தன்னுடைய காதலனுக்கு மிகவும் ரொமான்டிக்காக... காற்று கூட உள்ளே நுழைய முடியாத அளவுக்கு இறுக்கமாக கட்டிப்பிடித்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.