இசையின் வாரிசுக்கு பிரியாவிடை.! அம்மா - பாட்டி நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டார் பவதாரிணி!
இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்... அவரது சொந்த ஊரில் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இசைஞானி இளையராஜாவின் ஒரே மகளானபவதாரிணி நேற்று முன்தினம் (ஜனவரி 25) புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு இருந்த கல்லீரல் பபுற்றுநோய் 4-ஆவது ஸ்டேஜில் தான் தெரியவந்ததால், அலோபதி மருத்துவர்கள் கைவிரித்து நிலையில், ஆயுர்வேத சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையுடன் இலங்கை சென்றனர். உரிய சிகிச்சை துவங்குவதற்கு முன்பாகவே பவதாரிணி மரணமடைந்தார்.
இசையின் வாரிசான பவதாரிணியின் மறைவு, ஒட்டு மொத தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இலங்கையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி தொடந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
பின்னர் சென்னையில் இருந்து, அவரது சொந்த ஊரான தேனி அருகே உள்ள பண்ணையபுரத்திற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் பவதாரிணியை உடலை பார்க்க முடியாத பல பிரபலங்கள், நேரடியாக பண்ணையபுரம் சென்றனர். மேலும் அங்கிருந்த உறவினர்கள், கிராம மக்கள் பலர் பவதாரிணி உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சற்று முன்னர், பண்ணையபுரத்தில் உள்ள இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணையில்... இளையராஜாவின் அம்மா மற்றும் மனைவி உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே... பவதாரிணியின் உடல் அடக்கம் செயப்பட்டது. உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் கனத்த இதயத்துடன் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.