'மயில் போல பொண்ணு ஒன்னு' பவதாரிணியின் தேசிய விருது பாடல் பாடி இறுதி சடங்கு செய்த இளையராஜா குடும்பத்தினர்!

'மயில் போல பொண்ணு ஒன்னு' என்கிற பாடலை பாடி... பவதாரிணிக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளனர் இளையராஜாவின் குடும்பத்தினர்.
 

At the Bhavadarini funeral the family sang the mayil Pola Ponnu Onnu song mma

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கடந்த ஐந்து மாதங்களாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருடைய கல்லீரலில் இருந்து நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு புற்றுநோய் பரவி விட்டதால், கேசன் நான்காவது நிலையில் இருப்பதாக கூறி கை விரித்த மருத்துவர்கள், பவதாரிணி மிகவும் ஒல்லியாக இருப்பதால்... கீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் கூட செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தொடர்ந்து பவதாரிணிக்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்க என இலங்கைக்கு அழைத்துச் சென்றனர் அவரது குடும்பத்தினர். இலங்கையில் இயற்கை முறையில் மருத்துவம் செய்து வந்த நிலையில், ஜனவரி 25-ம் தேதி மாலை 5 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி பவதாரிணி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

முத்துபாண்டி ஆப்பு வைக்கப்போறது தெரியாமல் அடம் பிடிக்கும் கவிதா! சந்தேகத்தில் ஷண்முகம்.. அண்ணா சீரியல் அப்டேட்

At the Bhavadarini funeral the family sang the mayil Pola Ponnu Onnu song mma

இதைத்தொடர்ந்து நேற்று மாலை பவதாரிணியின் உடல் இலங்கையில்  இருந்து, சென்னைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்ட நிலையில்... அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தி. நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சில மணி நேரங்கள் பவதாரிணியின் உடல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து இளையராஜாவின் குடும்பத்தினர் பவதாரணையின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

அதிர்ச்சி... பதறி போன சிவகார்த்திகேயன்! 'அயலான்' பட பிரபலம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

At the Bhavadarini funeral the family sang the mayil Pola Ponnu Onnu song mma

 இதைத்தொடர்ந்து பவதாரிணியின் உடல் பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பவதாரிணி குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்த போது... 'பாரதி' படத்தில் அவர் பாடிய தேசிய விருது பாடலான, 'மயில் போல பொண்ணு ஒன்னு... குயில் போல பாட்டு ஒன்னு என்கிற பாடலை பாடி, பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios