இது தெரியாம போச்சே!! வனிதா விஜயகுமாரின் அக்கா கவிதாவும் ஒரு நடிகையா! எந்த படத்தில் நடிச்சிருக்காங்க தெரியுமா?
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான கவிதாவும் ஒரு நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். சரி அது எந்த படம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கன்னு - மஞ்சுளா என்கிற இரண்டு மனைவிகள் என்பதை அனைவரும் அறிவர். இவர்களில் முத்துகன்னுவுக்கு கவிதா, அனிதா, அருண் விஜய், என்கிற மூன்று பிள்ளைகளும், மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி, என மூன்று மகள்களும் உள்ளனர்.
மஞ்சுளாவின் மகள்களான வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி , ஆகிய மூவருமே திரையுலகில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துவிட்டு, பின்னரே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் எப்போதுமே சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இவர்களில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தன்னுடைய மகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில், பிக்பாஸ் மூலம் மீண்டும் திரையுலகிக்கு என்ட்ரி கொடுத்து.. அடுத்தடுத்து திரைப்படங்கள், சீரியல்கள், மற்றும் சில பிஸ்னஸ் களையும் செய்து வருகிறார்
மஞ்சுளா விஜயகுமாரின் மகள்கள் மூவருமே நடிகை என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் முத்துகன்னு - விஜயகுமார் தம்பதிக்கு பிறந்த இரு மகள்களுமே திரையுலகில் நடிக்கவில்லை என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் விஜயகுமாரின் மூத்த மகளான கவிதா விஜயகுமார், ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் வந்த வாய்ப்புகளை வேண்டாம் என உதறிவிட்டு சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
சரி அவர் எந்த படத்தில் நடித்தார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். "கவிதா விஜயகுமார், இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு, நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி என்கிற படத்தில் தான் அறிமுகமானார். இந்த படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தை மாணிக்க நாராயணன் தயாரிக்க, சுரேஷ் பீட்டர்ஸ் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சரத்குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் மீனா நடித்திருந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில்... ராதாரவி, ராஜா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கூலி தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்கும் நாயகனாக சரத்குமார் நடித்திருந்த இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
பெற்றோரை சிறு வயதிலேயே இழந்த தன்னுடைய தங்கையை, தாயுக்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக இருந்து, வளர்த்து படிக்க வைக்கும் நாயகன், எப்போதும் தன்னுடைய தங்கை கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட கூடாது என நினைப்பவர். சூழ்நிலையால் பெரிய இடத்திற்கு திருமணம் செய்து கொண்டு போகும் கவிதா, தன்னுடைய அண்ணன் வேலை செய்யும் மில்லுக்கு முதலாளியாகிறார். அண்ணன் அடிவாங்கி துடிக்கும் போது கூட, கண்ணீர் சிந்தாமல்... மிரட்டலான பர்பாமென்ஸை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்தார்.
இவரின் நடிப்பை பார்த்து வியர்ந்து, பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போதும் வேண்டாம் என உதறிவிட்டு... அமெரிக்காவைச் சேர்ந்த சங்கர் என்கிற தொழிலதிபரை, கவிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு, 55 வயது ஆகும் நிலையில்... ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கவிதாவின் மகள் ஹாசினிக்கு சமீபத்தில் தான் அருண் விஜய் மனைவியின் தம்பியுடன் திருமணமானது. மகள் மூலம் கவிதாவுக்கு, இரண்டு பேரக் குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பேரன் பேத்தி யெல்லாம் எடுத்துவிட்ட போதிலும், 30 வயது யங் லுக்கில் ஜொலிக்கிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.