55 வயசு.. பாட்டியானாலும் வனிதா விஜயகுமார் அக்கா கவிதாவின் பியூட்டி குறையல! வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்!
விஜயகுமாரின் மூத்த மகளான கவிதாவுக்கு தற்போது 55 வயதாகும் நிலையில், 30 வயது பெண் போல்.. கும்முனு இருக்கும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான கவிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 55 வயதிலும் இவர் கும்முனு அழகில் ஜொலிப்பதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
என்ன மாயமோ... மந்திரமோ... நடிகர் விஜயகுமாரின் மகள்கள் எப்போதுமே இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஒரு மாதமாகவே, விஜயகுமாரின் இரண்டாவது மகளும் மருத்துவருமான அனிதா விஜயகுமாரின், ரீசென்ட் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் அதிகம் கவனிக்க பட்டதாக மாறியது.
காரணம் 50 வயதிலும் 25 வயது பெண் போல் யங் லுக்கில் ஜொலித்தார். குறிப்பாக இவர் தன்னுடைய மகளையே பின்னுக்கு தள்ளும் அழகில் போஸ் கொடுத்தது தான் செம்ம ஹைலைட். இவரை தொடர்ந்து, இவரின் அக்கா அதாவது கவிதா விஜயகுமார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவருக்கு தற்போது 55 வயதாகும் நிலையில், 28 வயது பெண் போல் தான் பார்ப்பதற்கு இருக்கிறார்.
எனவே நெட்டிசன்கள் பலர், உங்களுக்கு மட்டும் வயதே ஆகாதா? என ஒரு வித பொறாமையுடன் தங்களின் கமெண்டை போட்டு வருகிறார்கள். விஜயகுமாருக்கு பிறந்த முதல் மகாலட்சுமி தான் இந்த கவிதா. எனவே இவர் மீது விஜயகுமாருக்கு அவ்வளவு பிரியம். அதே போல் தன்னை விட வயது குறைந்த அனைவரையுமே இவர் ஒரு தாய் போல் தான் பார்த்து கொண்டார்.
தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள்களை எப்போதுமே கவிதா உட்பட.... மூத்தமனைவியின் குடும்பத்தினர் யாருமே பிரிந்து பார்த்தது இல்லை. இதுவே இப்போதும் அவர்கள் மிகவும் ஒற்றுமையாகவும், அன்பாகவும் வாழ காரணம்.
கவிதா, ஒரே ஒரு படம் மட்டுமே தமிழில் நடித்துள்ள நிலையில்... பின்னர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர், ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார்.
அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில்... தரமான இரண்டு 'லியோ' பட நடிகர்கள்! தட்டி தூக்கிய மகிழ்திருமேனி!
இப்போது கூட அவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், வீட்டில் எந்த ஒரு முக்கிய விசேஷம் என்றாலும் ஆஜராக மறப்பது இல்லை. மேலும் கவிதா விஜயகுமாருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் ஹாசினிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாசினியின் முதல் மகள், நடிகர் அருண்விஜய் மனைவியின் தம்பியை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டி ஆனாலும் இவங்க பியூட்டி மட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையல பாஸ்.