அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில்... தரமான இரண்டு 'லியோ' பட நடிகர்கள்! தட்டி தூக்கிய மகிழ்திருமேனி!
அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில், லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு வில்லன் நடிகர்களை இயக்குனர் மகிழ்திருமேனி கமிட் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
அஜித்தின் துணிவு மற்றும் தளபதியின் வாரிசு ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியான நிலையில், தளபதி தன்னுடைய அடுத்த படமான 'லியோ' படத்தை நடித்து முடித்து விட்டார். ஆனால் அஜித் இன்னும் தன்னுடைய அடுத்த படமாக உருவாக உள்ள 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பை கூட துவங்கவில்லை.
இதற்க்கு முக்கிய காரணம் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான். அவர் கூறிய ஒன் லைன் பிடித்து போனதால், விக்கி இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டார். பின்னர் முழு கதையையும் கேட்ட பின்னர் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் இந்த படத்தில் இல்லாததால், கடும் அப்செட் ஆனார். எனினும் சில நாட்கள் விக்னேஷ் சிவனுக்கு கதையை மெருகேற்ற டைம் கொடுத்த போதிலும், அவர் கதை பிடிக்காமல் போகவே வேறு வழியின்றி, இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு, மகிழ் திருமேனி கமிட் ஆனார்.
விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும், இதுவரை ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. ஆனால் தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்கான பணிகள் அபுதாபியில் தொடங்கி இருப்பதாகவும், படக்குழுவினர் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை செய்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
மேலும் அவ்வப்போது, இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது லியோ பட நடிகர்கள் இரண்டு பேர் 'விடாமுயற்சி' படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரௌடிகளிடம் சிக்கிய இனியா? ஏய் தொலைச்சிடுவேன்... கேரளாவில் மாஸ் காட்டிய பாக்கியா! லேட்டஸ்ட் அப்டேட்!
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’மங்காத்தா’ படத்தில் அர்ஜூனுடன் இணைந்து மாஸ் சம்பவம் செய்திருப்பார் அஜித். ஆனால் முதல் முறையாக சஞ்சய் தத்துடன் இணைவதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.