நிறைமாத வயிற்றோடு... கொசுவலை போன்ற மாடர்ன் உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை காயத்திரி!
பிரபல சீரியல் நடிகை, காயத்ரி யுவராஜ் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரின் லேட்டஸ்ட் பிரக்னன்சி போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சிறு வயதில், பலர் நடிகையாக வேண்டும் என நினைத்தாலும், ஒரு சிலர் மட்டுமே தங்களின் கனவுகளை எட்டி பிடிக்கிறார்கள் அந்த வகையில், தன்னுடைய கனவை போராடி எட்டி பிடித்தவர் தான் காயத்ரி யுவராஜ். சென்னையைச் சேர்ந்த இவர், கல்லூரியில் படிக்கும் போதே... பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர்.
பின்னர், 'மானாட மயிலாட' என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது, தன்னுடன் நடனமாடிய டான்சர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடனம் மூலம் கிடைத்த பிரபலத்தால், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியலில், நிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. திறமையான நடிப்பாலும், அழகாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காயத்ரி, இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
நடிகர் மம்முட்டியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
குறிப்பாக அழகி, பொன்னூஞ்சல், மோகினி போன்ற தொடர்களிலும் நடித்தார். அதே போல் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனில் முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 12 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த காயத்ரி. தற்போது நிறைமாத கர்ப்பமாக இருப்பதால், மீனாட்சி பொண்ணுக சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
இவருக்கு சில தினங்களுக்கு முன்பு தான், இவரின் கணவர்... வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த நிலையில், தற்போது காயத்ரி நிறைமாத நிலவாக மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்டுள்ளார். இந்த போட்டோஸ், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.