ஓவர் பிஸி.. பந்தா பண்ணிய வேல ராமமூர்த்தி! குணசேகரன் ரோலுக்கு 2 நடிகர்களுடன் பேச்சு வார்த்தையில் சன் டிவி!
'எதிர்நீச்சல்' தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வேல ராமமூர்த்தி ஓவர் பந்தா பண்ணியதால் இரண்டு முக்கிய நடிகர்களிடம் தற்போது சன் டிவி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் 'எதிர்நீச்சல்' ஒவ்வொரு வாரமும் TRP-யில் டாப் 3 லிஸ்டில் இடம் பிடித்து வரும் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில்... தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திவரும் நடிகர் மாரிமுத்துவுக்கு முக்கிய பங்கு உண்டு.
நடிகர் மாரிமுத்து ஆரம்பத்தில் ஒரு துணை இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை துவங்கி, பின்னர் இயக்குனர், நடிகர் என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியவர். திரைப்படம் மூலம் இவருடைய நடிப்புக்கு, கிடைத்திராத வரவேற்பையும், பாராட்டையும் பெற்று தந்தது என்றால் அது 'எதிர்நீச்சல்' சீரியல் தான். இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதே போல் இவருடைய கதாபாத்திரம் சோசியல் மீடியாவிலும் சென்சேஷனலாக பார்க்கப்பட்டது.
அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில்... தரமான இரண்டு 'லியோ' பட நடிகர்கள்! தட்டி தூக்கிய மகிழ்திருமேனி!
இந்த சீரியலின் ஒவ்வொரு எபிசோடிலும், இவர் பேசும் வெரைட்டியான வசனங்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்தது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை.
இந்நிலையில் இவர், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி, காலை எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பேசியபோது லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டு, வேர்த்து கொட்டி உள்ளது. இதை தொடர்ந்து தனக்கு ஏதோ ஆகிறது என்பதை உணர்ந்து கொண்ட மாரிமுத்து, திடீரென காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். செல்லும் போதே தன்னுடைய மனைவிக்கு போன் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மருத்துவமனையை அடைவதற்கு முன்பே, அவருடைய நிலை மிகவும் மோசமாகி உள்ளது. மருத்துவமனை கார் பார்கிங்கிலேயே மயங்கி விழுந்த மாரிமுத்து மூச்சு பேச்சு இல்லாமல் ஆகியுள்ளார்.
பின்னர் மருத்துவர்கள் இவரை பரிசோதனை செய்து விட்டு, ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே போல் எதிர்நீச்சல் சீரியலின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
தொடர்ந்து சீரியலை ஒளிபரப்பும் சூழலில் சன் டிவி தரப்பு உள்ள நிலையில், அடுத்ததாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என பலகட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. முதலில் இந்த சீரியலில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துவரும் வேல ராமமூர்த்தி நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இவர் ஒரு ஜாடைக்கு பார்ப்பதற்கு மாரிமுத்து சாயலில் இருப்பதாலும், அவரை போலவே நடிப்பில் மேனரிசம் கொண்டவர் என்பதாலும் சன் டிவி தரப்பில் இருந்து பேசியும் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால், 'எதிர்நீச்சல்' தொடரில் நடிப்பது மிகவும் கஷ்டம் என்பது போல் ஓப்பனாகவே கூறினார்.
எனவே தற்போது 'எதிர்நீச்சல்' சீரியல் குழுவினர், வேல ராமமூர்த்தியை வெயிட்டிங்கில் வைத்து விட்டு, குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இரண்டு தரமான நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள தகவலில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாட கூடிய, நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும் அடுத்த குணசேகரன் ஆக இந்த மூவரில் யார் நடிப்பார்கள் என்பது விரைவில் தெரியவரும்.