MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதலில் உருகிய மனோரமா.. தாய் பேச்சை மீறி திருமணம்! ஒரு மாத குழந்தையோடு ஏமாந்து நின்ற சோகம்! பிளாஷ் பேக் ஸ்டோரி

காதலில் உருகிய மனோரமா.. தாய் பேச்சை மீறி திருமணம்! ஒரு மாத குழந்தையோடு ஏமாந்து நின்ற சோகம்! பிளாஷ் பேக் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையான காமெடி நடிப்பால் பல ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள, மனோரமாவின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை சோகங்கள் நிறைந்தவை. அதை பற்றி தான் இந்த பிளாஷ் பேக் ஸ்டோரியில் பார்க்க போகிறோம். 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 13 2023, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

காமெடியில் பல ஆண் நடிகர்கள் சிறந்து விளங்கி இருந்தாலும், காமெடியில் வெற்றிக்கொடி நாட்டிய பெண்கள் வெகு சிலரே. அந்த வகையில் மன்னார்குடியில் பிறந்து, சிறு வயதிலேயே மேடை நாடகங்கள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, பின்னர் வெள்ளித்திரையில் 1950களில் நடிக்க துவங்கிய ஆச்சி மனோரமாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. 

 

210

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் சுமார் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். 

ஓவர் பிஸி.. பந்தா பண்ணிய வேல ராமமூர்த்தி! குணசேகரன் ரோலுக்கு 2 நடிகர்களுடன் பேச்சு வார்த்தையில் சன் டிவி!

 

310

நடிகை என்பதை தாண்டி, ஒரு பாடகியாகவும் தனக்கென தனி அடையாளம் பதித்தவர். திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் ஆச்சி என அழைக்கப்பட்ட இவரின் திரை வாழ்க்கை யாராலும் எட்ட முடியாத அளவுக்கு வெற்றிகரமானதாக இருந்திருந்தாலும், திருமண வாழ்க்கை குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. 

 

410

அப்படி அவர் வாழ்க்கையில் என்னதான் நடந்தது... உருகி உருகி காதலித்த காதலரை, அம்மாவை மீறி கரம் பிடித்த கணவனை விட்டு மனோரமா பிரிய காரணம் என்ன? என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நிறைமாத வயிற்றோடு... கொசுவலை போன்ற மாடர்ன் உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை காயத்திரி!

 

510

மனோரமா திரைப்படங்களில் நடிக்கும் முன்பு, மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் என்பது நாம் அறிந்ததே. அப்படி இவர் நடித்து வந்த நாடக கம்பெனியில், முக்கிய பொறுப்பில் இருந்தவர் தான் எஸ்.எம்.ராமநாதன். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர்களின் உறவு, பின்னர் காதலாக கனிந்தது. எஸ்.எம்.ராமநாதன் மனோரமாவுக்கு பொருத்தம் இல்லாதவர் என கூறி, மனோரமாவின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார் அவரின் தாய் ராமாமிர்தம்.

 

610

தன்னுடைய காதலிலும், எஸ்.எம்.ராமநாதன் மீது மனோரமா வைத்த நம்பிக்கையும் இவரை, தாய்க்கே  தெரியாமல் ராமநாதனை கரம் பிடிக்க தூண்டியது. அதன்படி மனோரமா திருச்செந்தூர் கோவிலில் தன்னுடைய காதலர் ராமநாதனை திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் 1954-ஆம் ஆண்டு நடந்தது. 

அய்யோ 25 கோடி போச்சே.! மகளுக்கு கொலை மிரட்டல்! நடிகை கௌதமி காவல்துறை ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

 

710

மனோரமாவின் தாய், தன்னுடைய மகள் தன்னை மீறி திருமணம் செய்து கொண்டதால்... அவரிடம் சில மாதங்கள் பேசாமல் இருந்த நிலையில், பின்னர் மனோரமா கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஏற்றுக்கொண்டார். 

 

810

மேலும் மனோரமாவுக்கு தன்னுடைய கணவர் ராமநாதன் சுயரூபம் திருமணத்திற்கு பின்னரே தெரியவந்தது. பணத்தில் மட்டுமே குறியாக இருந்த இவர், மனோரமா கர்ப்பமாக உள்ளதை கூட, கண்டுகொள்ளாமல் தொடர்ந்து, மேடை நாடகங்களில் நடிக்க கூறி வற்புறுத்தினார். நிறைமாத கர்ப்பிணியாக கூட சில நாடகங்களில் நடித்தார் மனோரமா.

எல்லார் கண்ணும் இவங்க மேலதான்... தங்கச்சியின் திருமணத்தில் தகதகவென மின்னிய ரம்யா பாண்டியன் - வைரல் கிளிக்ஸ்

910

ஒருவழியாக மனோரமா தன்னுடைய மகன் பூபதியை பெற்றெடுத்த பின்னர், மனைவி மற்றும் குழந்தை மீது துளியும் பாசம் காட்டாமல், ஒரு மாதத்திற்கு பின்னரே ராமநாதன் அவர்களை காண வந்த நிலையில், குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்க வற்புறுத்தியுள்ளார். பணத்தை மட்டுமே குறியாக நினைக்கும், கணவரே வேண்டாம் என எண்ணிய மனோரமா... அவரிடம் இருந்து முழுமையாக விலகினார். 

1010

கணவரை விட்டு பிரிந்த பின்னரே... மனோரமா வெள்ளித்திரையில் அறிமுகமானார். தன்னுடைய மகனை மிகவும் சொகுசாக வளர்க்க, லட்ச லட்சமாக சம்பாதித்தார். திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தாலும், திரையுலகில் ஒரு சாதனை பெண்ணாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Anitha Vijayakumar: நீங்க டாக்டரா.. இல்ல ஆக்டரா? 50 வயதிலும் 25 வயசு மகளுக்கு டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
எம்.ஜி.ஆர்.
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved