Anitha Vijayakumar: நீங்க டாக்டரா.. இல்ல ஆக்டரா? 50 வயதிலும் 25 வயசு மகளுக்கு டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்
விஜயகுமாரின் இரண்டாவது மகளான, அனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உறவினரின் வெட்டிங் ரிசப்ஷன் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ..
பழம்பெரும் நடிகரான விஜயகுமார், முதலில் முத்துகன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் கவிதா, அனிதா என்கிற இரு மகள்களும், அருண் விஜய் என்கிற மகனும் விஜயகுமாருக்கு உள்ளனர்.
அருண் விஜய் பிறந்த சில வருடங்களில், நடிகை மஞ்சுளாவுடன் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் முட்டிக்கொள்ளவே, முதல் மனைவி சம்மதத்துடன், மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சுளா மூலம் நடிகர் விஜயகுமாருக்கு, வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் பிறந்தனர்.
அய்யோ 25 கோடி போச்சே.! மகளுக்கு கொலை மிரட்டல்! நடிகை கௌதமி காவல்துறை ஆணையரிடம் பரபரப்பு புகார்..!
முதல் மனைவி முத்துகன்னுவின் இரண்டு மகள்களுடன் படித்து முடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்கள். குறிப்பாக அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவர். மகன் அருண் விஜய் மட்டுமே திரையுலகில் கவனம் செலுத்திய நிலையில், ஆரம்பத்தில் இவரின் திரையுலக பயணம் டல் அடித்தாலும், பின்னர் அஜித்துடன்... அருண் விஜய் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் இவருடைய திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இந்த படத்திற்கு பின்னர் அருண் விஜய் முன்னணி இடத்திற்கு நகர்ந்தார்00. தற்போது தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூன்று மகள்களும் நடிப்பில் களமிறங்கினர்.
அந்த வகையில் வனிதா சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு திருமணம் ஆகி செட்டில் ஆனார். ஆனால் திருமண வாழ்க்கை சரியில்லாமல்... மூன்று திருமணம் செய்தும் தற்போது மகளுடன் சிங்கிள் மதராகவே வாழ்ந்து வருகிறார். அதே போல், குடும்பத்துடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக வணிதாவிடம் யாருமே பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதாவுக்கு அடுத்தடுத்து பிறந்த, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். எந்த ஒரு விசேஷம் என்றாலும், பிக்பாஸ் பேபிலி போல், பிக் பேமிலியாக விஜயகுமார் குடும்பத்தினர் அனைவரும் ஆஜராகி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது குடும்ப உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில், அனிதா விஜயகுமார், ப்ரீத்தா, என ஒட்டு மொத்த குடும்பமும் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த சில புகைப்படங்களை அனிதா விஜயகுமார் அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, ரசிகர்கள் பலர்... நீங்கள் உண்மையில் டாக்டரா? இல்ல ஆக்டரா என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
காரணம் 50 வயதிலும், தன்னுடைய 25 வயது மகள் தியாவுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கிறார் அனிதா விஜயகுமார். குறிப்பாக இவர் அணிந்துள்ள ஜிகு ஜிகு லெஹன்கா வேற லெவல் என புகழும் அளவுக்கு இவருக்கு எடுப்பாக பொருந்தி உள்ளது.
இவரின் ரீசென்ட், போட்டோஸ் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய மகள் தியாவின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.