ரம்யா பாண்டியனின் தீராத காதல்..! இயற்கை ஆர்வலர்களுடன் சேர்ந்து 143 மரங்கள் நட்ட இடையழகி! குவியும் வாழ்த்து!
நடிகை ரம்யா பாண்டியன் செடிகள் வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்த விஷயம் தான். இவர் சில இயற்க்கை ஆர்வலர்களுடன் சேர்ந்து மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும், நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது, ரசிகர்கள் மனதை மயக்கும் விதத்தில், போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி இவர் வெளியிடும் போட்டோ ஷூட்டுகளை கண்டு ரசிப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும், இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 2.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமாகி இருந்தாலும், அடுத்தடுத்த படங்கள் படு மோசமான தோல்வியை தழுவியதால், திடீர் என சின்னத்திரைக்கு தாவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ், பிக்பாஸ் அலட்டிமேட் போன்ற நிகழ்ச்சிகளில் கலக்கினார்.
மிகவும் சாமர்த்தியமாக விளையாடி ஃபைனல் வரை வந்தாலும் கூட, இவரால் வெற்றி கனியை ருசிக்க முடியவில்லை. அதே போல், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்று நடிக்காமல் பட தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் இடும்பன் காரி, உள்ளிட்ட ஓரிரு படமே உள்ளது. ரம்யா பாண்டியன் எப்படி ஒரு திறமையான நடிகையே அதே போல் இயற்கை மீது தீராத காதல் கொண்டவர். பிக்பாஸ் வீட்டில் கூட அனைவரது செடிகளையும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வளர்த்தார். எனவே கமல்ஹாசனும் ஃபைனலில் போது இவருக்கு சில செடிகளின் விதைகளை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரம்யா பாண்டியன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இயற்கையின் பரிசுகளைப் போற்றுதல்: என்கிற கேஷனுடன்... " ஒவ்வொரு ஆண்டும் 143 மரக்கன்றுகளை நட்டு, வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் இயற்கையின் அழகை வளர்க்க மாநிலம் முழுவதிலும் இருந்து கூடிவரும் நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த நன்றி என கூறி அவர்களுடன் மரம் நட்டபோது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.