எல்லார் கண்ணும் இவங்க மேலதான்... தங்கச்சியின் திருமணத்தில் தகதகவென மின்னிய ரம்யா பாண்டியன் - வைரல் கிளிக்ஸ்
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் காதல் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தை நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ramya pandian photos
டம்மி டப்பாசு படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியனை பேமஸ் ஆக்கியது அவரின் மொட்டைமாடி போட்டோஷூட் தான். சேலையில் இடுப்பழகை காட்டியபடி மொட்டை மாடியில் நடத்திய ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா.
ramya pandian family photo
இதனால் இவரை இடுப்பழகி என அழைக்கத் தொடங்கினர். பின்னர் ரம்யா பாண்டியனை காப்பி அடித்து ஏராளமான இளம் நடிகைகள் மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தினர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ramya pandian at her sister wedding
போட்டோஷூட் மூலம் பேமஸ் ஆன ரம்யா பாண்டியன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார். அது முடிந்த கையோடு ரம்யா பாண்டியனுக்கு பிக்பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பைனல் வரை முன்னேறினாலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார் ரம்யா.
இதையும் படியுங்கள்... அஜித் - ஷாலினி போல் ஒரே படத்தில் ஒர்க் அவுட் ஆன காதல்.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் லவ் ஸ்டோரி தெரியுமா
ramya pandian family
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியான ரம்யா பாண்டியன், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்று நடிகை ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி பாண்டியனின் திருமணம் திருநெல்வேலியில் வைத்து நடைபெற்று உள்ளது.
ramya pandian at keerthi pandian wedding
இதில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், புது மண தம்பதிகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்து உங்களுக்கு எப்போ கல்யாணம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ramya pandian Recent clicks
ஒரு சிலரோ கல்யாண ஜோடிகளை விட உங்களோட போட்டோவுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் எனக் கமெண்ட் செய்து வருகின்றனர். பட்டு சேலையில் குடும்ப குத்துவிளக்காக மின்னும் நடிகை ரம்யா பாண்டியனின் இந்த ரீசண்ட் போட்டோஸுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... இருட்டுக்கடை அல்வா முதல் பருத்திப்பால் பாயாசம் வரை... அசோக் செல்வன் திருமணத்தில் கமகமக்கும் பசுமை விருந்து