MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அஜித் - ஷாலினி போல் ஒரே படத்தில் ஒர்க் அவுட் ஆன காதல்.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் லவ் ஸ்டோரி தெரியுமா

அஜித் - ஷாலினி போல் ஒரே படத்தில் ஒர்க் அவுட் ஆன காதல்.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் லவ் ஸ்டோரி தெரியுமா

நடிகர் அஜித் - நடிகை ஷாலினி போல் நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியனின் காதலும் ஒரே படத்தில் கைகூடியது பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 13 2023, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ashok selvan Marriage

ashok selvan Marriage

நட்சத்திர காதல் ஜோடிகள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அஜித் - ஷாலினி தான். இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தது ஒரே படத்தில் தான். அந்த படத்திலேயே காதலித்து அப்படம் ரிலீஸ் ஆனவுடன் இந்த ஜோடி திருமணமும் செய்துகொண்டது. அஜித் - ஷாலினி இடையே காதல் மலர காரணமாக இருந்த படம் அமர்க்களம் தான். அப்படம் ஹிட் ஆனதைப் போல் இவர்களது காதலும் சக்சஸ் ஆகி, பலருக்கும் ரோல் மாடலாக இருக்கின்றனர்.

24
ashok selvan, keerthi Pandian

ashok selvan, keerthi Pandian

அஜித் - ஷாலினியை போல் தற்போது தமிழ் சினிமாவில் மற்றுமொரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டுள்ளது. அவர்கள் தான் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜோடியாக இணைந்து நடித்துவிட்டனர். அப்படம் தான் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்தது அந்த படத்தின் மூலம் தான்.

இதையும் படியுங்கள்... பண்ணை வீட்டில் காதல் திருமணம்... நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் - வைரலாகும் போட்டோஸ்

34
ashok selvan Keerthi Pandian Love Story

ashok selvan Keerthi Pandian Love Story

அந்த படத்தின் பெயர் ப்ளூ ஸ்டார். இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தினகரன் சிவலிங்கம் என்பவர் தான் இயக்கி உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் மட்டுமின்றி சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

44
ashok selvan love story

ashok selvan love story

இப்படத்தில் தான் அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர் அந்த காதல் படிப்படியாக அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் இன்று திருநெல்வேலியை அடுத்த இட்டேரியில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... இருட்டுக்கடை அல்வா முதல் பருத்திப்பால் பாயாசம் வரை... அசோக் செல்வன் திருமணத்தில் கமகமக்கும் பசுமை விருந்து

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved