MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aranmanai 4 : தொடரும் வசூல் வேட்டை... ரஜினி படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ஆறே நாளில் அடிச்சு தூக்கிய அரண்மனை 4

Aranmanai 4 : தொடரும் வசூல் வேட்டை... ரஜினி படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ஆறே நாளில் அடிச்சு தூக்கிய அரண்மனை 4

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் அரண்மனை 4 திரைப்படம் ரஜினி படத்தின் லைப் டைம் வசூலை முந்தி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : May 09 2024, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aranmanai 4 beats Lal salaam Box Office Collection

Aranmanai 4 beats Lal salaam Box Office Collection

அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ், கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். இப்படத்தை அவ்னி மூவீஸ் நிறுவனம் சார்பில் சுந்தர் சி-யும், குஷ்புவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Aranmanai 4

Aranmanai 4

விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற அரண்மனை 4 திரைப்படம் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் ரூ.50 கோடி என்கிற இமாலய வசூலை ஆறே நாட்களில் எட்டிப்பிடித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்காமல் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு அரண்மனை 4 படம் ஆறுதல் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்... Rashmika : தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன் முதன்முறையாக ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா - ஷாக்கான ரசிகர்கள்

34
lal salaam

lal salaam

இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படம் கூட இந்த அளவுக்கு வசூலிக்கவில்லை. லால் சலாம் திரைப்படம் மொத்தமாகவே ரூ.30 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படம் லால் சலாம் படத்தின் லைப் டைம் வசூலை ஆறே நாட்களில் அடிச்சு தூக்கி பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் அரண்மனை 4 திரைப்படம் ரூ.100 கோடி வசூலையும் அசால்டாக எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

44
Aranmanai 4 Box Office collection

Aranmanai 4 Box Office collection

அரண்மனை 4 படம் தான் இந்த ஆண்டு கோலிவுட்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற மே 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்தை இளன் இயக்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Mannangatti : யூடியூப்பர் இயக்கத்தில் நயன்தாரா நடித்த மண்ணாங்கட்டி படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved