TRP-யில் முதல் இடத்தில் மாஸ் காட்டும் 'எதிர்நீச்சல்'! அடித்து.. பிடித்து.. மேலே வரும் விஜய் டிவி சீரியல்!
ஒவ்வொரு வாரமும், எந்த சீரியல் அதிக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது, என்பது பற்றி தெரிந்து கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில்... இந்த விவரங்களை நாம் TRP புள்ளிகளை வைத்து தெரிந்து கொள்கிறோம். இந்த வருடத்தின் 36-வது வாரத்தில் அதிக TRP-யை கைப்பற்றிய சீரியல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த வாரம், வழக்கம் போல் 'எதிர்நீச்சல்' தொடர் தான் 10.79 புள்ளிகளுடன், முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த சீரியலின் ஆலமரமாக இருந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து, மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்த வாரத்தில் இந்த சீரியலின் TRP டல்லடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இரண்டாவது இடத்தை, 10.74 புள்ளிகளுடன் 'கயல்' சீரியல் தக்க வைத்துக்கொண்டுள்ளது. தங்கை செய்த கொலையை மறக்க கயல் படாத பாடு பட்டு வருகிறார். அதே நேரம் பல நேரங்களில் பதட்டப்பட்டு உண்மையை ஆனந்தி கூறிவிடுவாரா? என்கிற பரபரப்புக்கு மத்தியில் கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதுவரை எழில் மீது இருந்த காதலை வெளிப்படுத்தாமல் இந்த கயல்... இன்று வெளிப்படுத்துவார் என தெரிகிறது.
சுந்தரி சீசன் 2 சீரியல் தன்னுடைய புதிய பரிமாணத்திலும் ரேட்டிங்கில் விடாமல், கெத்து காட்டி வருகிறது. அதன்படி இந்த வாரம் 9.79 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், அனு - கார்த்திக்கு பிறந்த மகளை தன் மகளாக, சுந்தரி வளர்த்து வரும் நிலையில், கார்த்திக்கை கூடிய விரைவில் சுந்தரி சந்திப்பார் என்கிற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
அண்ணன் - தங்கைகளின் பாச பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும், 'வானத்தை போல' சீரியல் இந்த வாரம் 9.53 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் தற்போது முழுக்க முழுக்க துளசி - ராஜ பாண்டி பற்றிய கதைக்களம் அனல் பறக்க ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மிஸ் யூ சார்..! ஆதி குணசேகரன் இல்லாமல் வெளியான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ! லேட்டஸ்ட் அப்டேட்..
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், அதனை கணவரின் உதவியுடன் தில்லாக சமாளிக்கும் துணிச்சலான பெண்ணான இனியாவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் 'இனியா' சீரியல், இந்த வாரம் 8.82 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
மாமனின் சூழ்ச்சியை முறியடித்து, தற்போது தன்னுடைய கணவரை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார் மிஸ்டர் மனைவியான அஞ்சலி. இந்த தொடர், இந்த வாரம் 8.34 புள்ளிகளுடன் TRP லிஸ்டில் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை? இரண்டு முக்கிய இடங்களில் வசூலில் கோட்டை விட்ட 'ஜவான்'!
இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லட்சுமி சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் TRP லிஸ்டில் 8.26 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
'பாக்கிய லட்சுமி' சீரிய 8.23 புள்ளிகளுடன் இந்த வாரம் TRP லிஸ்டில் எட்டாவது இடத்தில் உள்ளது. சில வாரங்களாக கொஞ்சம் டல்லாக சென்று கொண்டிருந்த 'பாக்கியலட்சுமி' தொடர் தற்போது பாக்கியாவின் மாஸான செயல்களால் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்த வாரம், பாண்டியன் ஸ்டார் தொடர், அடித்து பிடித்து...7.21 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திற்க்கு வந்துள்ளது. பாண்டியன் ஸ்டார் குடும்பம் தற்போது சொந்த வீட்டில், எந்த பிரச்னையும் இன்றி வாழ துவங்கிவிட்டதால், விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த சீரியலின் சீசன் 2 துவங்கப்படுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போமே.
இறுதியாக டாப் 10 TRP லிஸ்டில், சன் டிவியில் தினம் தொடரும் 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல், 6.89 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
நடிகர் தனுஷ், சிம்பு, உட்பட நான்கு முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட்..! திரையுலகில் பரபரப்பு..!