Ajith kumar: 'ஆசை' படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா? இயக்குனர் வசந்த் கூறிய தகவல்!
ஆசை படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் என்பது பற்றி இப்படத்தின் இயக்குனர் வசந்த் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மல்டி டேலெண்டெட் நாயகனாக கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்த்துள்ளவர் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட அஜித் குமார். 1990-ஆம் ஆண்டு 'என் கணவர் என் வீடு' என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய அஜித், பின்னர் 'அமராவதி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்த அஜித்துக்கு... பல போராட்டங்களுக்கு பின்பு தான் ராஜாவின் பார்வையிலே, பவித்ரா போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் சரியாக போகாத காரணத்தால்.. விரக்தியில் சினிமாவை விட்டே விலகி விட வேண்டும் என்கிற முடிவில் அஜித் இருந்த போது தான் இயக்குனர் வசந்த் இயக்கத்தில், உருவான 'ஆசை' பட வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது.
ஆனால் அஜித் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த படம் சூப்பர்... டூப்பர் ஹிட் அடித்தது. அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை இந்த படம் ஏற்படுத்திய நிலையில்... அடுத்தடுத்து வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி, போன்ற பல படங்களில் நடித்தார். இவற்றில் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் சில படங்கள் வெற்றி பெற்றது. அதே போல் அஜித்துக்கு என தனி ரசிகர்கள் கூட்டமும் உருவானது.
தற்போது கோலிவுட் திரையுலகில்... பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்ந்துள்ள அஜித்துக்கு... திருப்புமுனையாக அமைத்த 'ஆசை' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் கிடையாது என்பதையும், முதலில் வசந்த் அணுகிய ஹீரோ பற்றியும் தன்னுடைய பழைய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன் படி, நடிகர் சூர்யா படித்து முடித்து விட்டதை அறிந்து... அவரை தான் ஆசை படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க அணுகியுள்ளார். அப்போது சூர்யா, கார்மெண்ட்ஸ் பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தார். எனவே வஸத் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார்.
சூர்யா நடிக்க முடியாது என கூறியதை தொடர்ந்து, அமராவதி படத்தை பார்த்த வஸத் அஜித் தன்னுடைய படத்திற்கு சரியாக இருப்பர் என அணுகி, பின்னர் அவரையே வைத்து இந்த படத்தை எடுத்து முடித்தார். சூர்யா மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டிய போது வசந்த் தான் இயக்கிய, 'நேருக்கு நேர் ' படத்தில் அவரை நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.