MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Dhanush: நண்பரின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து கூறிய தனுஷ்! வைரலாகும் போட்டோ!

Dhanush: நண்பரின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து கூறிய தனுஷ்! வைரலாகும் போட்டோ!

தனுஷ் தன்னுடைய நண்பரின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
manimegalai a
Published : Jun 18 2024, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தென்னிந்திய திரையுலகின் உள்ளேயே வட்டமடிக்காமல், அதை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகிலும் கால்பதித்து அனைவரையும்  வியக்க வைத்தார். நடிப்பை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், லிரிக்ஸ் ரைட்டர் என பன்முக கலைஞராக வலம் வருகிறார்.
 

24

தனுஷ் மிகவும் எதிர்பார்த்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், தன்னுடைய 50-ஆவது படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா, சரவணன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துளள்னர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

வெறித்தன விஜய்சேதுபதி Is back - 2024ல் தெலுங்கு மாநிலத்தில் அதிக வசூல் செய்த மகாராஜா! எத்தனை கோடி தெரியுமா?
 

34

இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். மனைவி ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பின்னர்... இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் தனுஷ், அவ்வப்போது சுமூக வலைதளத்தில்.. சில முக்கிய பதிவுகளை மட்டுமே வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

44

இவரது நண்பர் வேறு யாரும் அல்ல, துபாய் நாட்டின் ஸ்பீக்கர் முகமது அப்துல்மகித் செத்திகி என்பவர் தான். துபாய் நாட்டை சேர்ந்த இவர் Seddiqi குடும்பத்தில் பிறந்தவர். 1960 இல் அவரது தாத்தா நிறுவிய குடும்பத்திற்கு சொந்தமான வாட்ச் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்றுகொண்டார். ரோலக்ஸ், ராடோ போன்ற பல விலை உயர்ந்த வாட்ச் மற்றும் தங்கம் மற்றும் வைரங்கள் பாதிக்கப்பட்ட வாட்சுகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இவரின் நிறுவனம் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 65 இடங்களில் இவரின் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி வெயிட்டான நண்பரின் பிறந்தநாளை தான் மறக்காமல் நினைவில் கொண்டு வாழ்த்து கூறியுள்ளார் தனுஷ்.

Jason Sanjay in Goat: 'கோட்' படத்தில் தளபதியுடன் நடித்திருக்கும் சஞ்சய்! பட் இந்த ட்விஸ்ட் புதுசு கண்ணா புதுசு

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved