அட்ரா சக்க.. சொந்த ஊரில் பலர் உதவியால் சொந்த வீடு கட்டிய பிக்பாஸ் தாமரை! எப்போது கிரஹப்பிரவேசம் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, தாமரை செல்வி இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் உட்பட சிலர் உதவி செய்ததன் மூலம், தன்னுடைய பெற்றோருக்கு என்று புதுக்கோட்டையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ள நிலையில், இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் எப்போது என்பதை அறிவித்து அனைவரையும் வாழ்த்த அழைத்துள்ளார்.
தெரு கூத்து கலைஞரான தாமரை செல்வி, தன்னுடைய சிறு வயதில் இருந்தே மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தவர். இவரின் பெற்றோர் தற்போது வரை, ஒண்டி குடிசையில் தான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். தங்களின் குடும்ப கஷ்டத்தின் காரணமாக, சிறு வயதிலேயே தாமரை செல்வியை, அவரை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். முன்னாள் கணவர் மூலம் தாமரை செல்விக்கு மகன் ஒருவரும் இருந்தார்.
எனவே தன்னுடைய மகனுக்கு தன் மீது எந்த தப்பும் இல்லை, என் மகன் என்னிடம் வரவேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தாமரையின் ஆசையை நிறைவேற்ற அவரின் இரண்டாவது கணவரும் விரும்பினார். மேலும் பிக்பாஸ் விளையாட்டு என்பது என்னவென்றே தெரியாமல் வீட்டின் உள்ளே வந்திருந்தாலும், முதல் வாரத்திலேயே தலைவர் பதவியை கைப்பற்றியதோடு, மிகவும் சாமர்த்தியமாக விளையாடி பைனல் வரை சென்றார்.
இவருக்கு பல லட்சம் கடன் இருந்தும், பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு வெளியே செல்லாமல் நிலைத்து விளையாடியது, இவர் மீதான மதிப்பை கூடியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சில திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்ததோடு, சில சீரியல்களிலும் நடித்தார்.
மேலும் தாமரை செல்வியின் சொந்த ஊரான புதுக்கோட்டையில், அவரின் பெற்றோர் படும் கஷ்டத்தை பற்றி கேள்விப்பட்ட, இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் கிரவுண்ட் ஃபண்டிங் மூலம் அவர்களுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்தார். இதற்கான பெரும் தொகையை அவர் வழங்கிய நிலையில், ரசிகர்கள் சிலரும் தாமரை சொந்த வீடு கட்ட உதவினார்கள். இந்த வீடு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், எதிர்பாராத விதமாக தாமரை செல்வியின் தந்தை கோபாலன் மரணமடைந்ததால் வீடு கிரஹப்பிரவேசம் செய்வது தாமதமானது.
இதை தொடர்ந்து தற்போது வீடு கிரஹப்ரவேச பத்திரிகையை வெளியிட்டு, ரசிகர்களை வரவேற்றுள்ளார் தாமரை. செப்டம்பர் 17 ஆம் தேதி, இந்த விசேஷம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் வசந்தன் மற்றும் பிக்பாஸ் ஜக்கி பெர்ரி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெறிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.