வாழ்க்கையில் நடந்த பூகம்பம்.. கதறி அழுத விசித்ரா! குறைபாட்டை கூறி அதிர்ச்சி கொடுத்த மாயா! பரபரப்பு ப்ரோமோ!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பூகம்பம் என்கிற பெயரில் டாஸ்க் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ இதோ...
கடந்த சீசன்களை விட, இந்த சீசன் பல ரசிகர்களால் அதிகம் விருப்பி பார்க்கப்பட காரணம்.. காரம் சாரமான சண்டைகளை தாண்டி, இதில் வைக்கப்படும் டாஸ்குகள் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதே போல் மற்ற சீசன்களில் போட்டியாளர்கள் டாஸ்குகளில் வெற்றி பெறுவதற்காக விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை டாஸ்கில் தோற்றால் என்ன, பெனிபிட் என்பதை நினைத்து மூர்க்கமாக விளையாடி வருவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் இந்த வாரம், பழைய போட்டியாளர்கள் சிலரை... வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க வைக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. பிரதீப்பின் வருகைக்காக கூட, இந்த டாஸ்க் இருக்கலாம் என்பது பலரது கருத்தாக உள்ள நிலையில், இன்றைய முதல் புரோமோவிலேயே, போட்டியாளர்கள் டாஸ்க்கை செய்து முடிக்க முடியாமல், திணறியதை பார்க்க முடிந்தது.
இதை தொடர்ந்து சற்று முன் வெளியான புரோமோவில், போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பூகம்பத்தை கூறுகிறார்கள். விசித்ரா பேசி முடித்ததும், அவரை போட்டியாளர்கள் அனைவரும் கட்டி பிடித்து ஆறுதல் கூறுகிறார்கள்.
மாயா நான் ஒரு ADHD குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தை. ஆனால் அதை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என கூறுகிறார். ஜோவிகா அம்மம்மாவின் இறப்பு தான் தன்னை அதிகம் உலுக்கியதாக தெரிவிக்கிறார். தினேஷ் தன்னுடைய மனைவி மகாலட்சுமி மற்றும் தனக்கும் இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசுகிறார். இந்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.