ஆடிஷனில் 100-க்கு 2 மதிப்பெண்கள் பெற்ற உச்சநடிகர்.. பின்னர் ஒரே 25 ஹிட் படங்களை கொடுத்தவர்..
பல ஆண்டுகளாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வரும் உச்ச நடிகர் ஒருவர், ஒரு காலத்தில் தனது தோற்றத்திற்காக நிராகரிக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மோகன்லால் விஸ்வநாதன். குறிப்பாக மலையாள திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வரும் அவர், ஒரு காலத்தில் தனது தோற்றத்திற்காக நிராகரிக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். நடிப்புக்கான ஆடிஷனின் போது போது அவருக்கு 100க்கு 2 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
இன்று நடிகர் மோகன்லால் தனது 64 வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவரின் திரை பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மோகன்லால் விஸ்வநாதன் 1960 மே 21 அன்று கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூரில் பிறந்தார். இவர் கேரள அரசின் முன்னாள் அதிகாரியும், சட்டத்துறை செயலாளருமான விஸ்வநாதன் நாயர் மற்றும் சாந்தகுமாரி ஆகியோரின் இளைய பிள்ளை ஆவார். அவரது மூத்த சகோதரர் பியாரேலால் 2000 ஆம் ஆண்டு ராணுவ பயிற்சியின் போது இறந்தார்.
திருவனந்தபுரம் முடவன்முகலில் வளர்ந்த, அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார், மேலும் மகாத்மா காந்தி கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். மோகன்லால் முதன்முதலில் ஆறாம் வகுப்பு, ஒரு மேடை நாடகத்தில் 90வயது முதியவராக நடித்தார். 1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் கேரள மாநில மல்யுத்த சாம்பியனாகவும் இருந்தார்.
மோகன்லால் 1978 இல் திரைநோட்டம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகஅறிமுகமானார், இப்படத்தில் குட்டப்பன் என்ற மனநலம் குன்றிய வேலைக்காரனாக நடித்தார். இருப்பினும், தணிக்கை சிக்கல்களால், இந்த படம் வெளியாக தாமதமானது.. 1980 இல், ஃபாசில் இயக்கிய மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் மோகன்லால் வில்லனாக நடித்தார். இப்படம் பெரிய வெற்றி பெற்றது.
ஒருமுறை நவோதயா ஸ்டுடியோவுக்கு அவரது நண்பர்கள் விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். மோகன்லால் ஆடிஷனுக்கு சென்ற போது சில இயக்குனர்கள் அவரது தோற்றத்தை விரும்பவில்லை, மேலும் அவருக்கு மோசமான மதிப்பெண்களை வழங்கினர், ஆனால் ஃபாசில் மற்றும் ஜிஜோ அப்பச்சன் அவருக்கு அதிக மதிப்பெண்களை வழங்கினர்.
இயக்குனர் ஃபாசில் ஒருமுறை அளித்த பேட்டியில் மோகன்லால் ஆடிஷன் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “ மோகன்லாலை ஒரு படத்திற்காக ஆடிஷன் செய்ய வேண்டியிருந்தது. பேனலில் இருந்த இரண்டு இயக்குனர்கள் மோகன்லாலின் தோற்றத்தில் ஈர்க்கப்படவில்லை, மேலும் அவருக்கு 100 க்கு 2 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்தனர், இதனால் அவர்கள் அவரை நிராகரித்தனர். இருப்பினும், படத்தில் அவரை நடிக்க வைக்க நான் வலியுறுத்தினேன். இந்த படம் அது வெற்றியடைந்து மோகன்லாலை பார்வையாளர்களிடையே பிரபலமாக்கியது.” என்று கூறினார்.
Suraj Venjaramoodu in Mohanlal film Empuraan
Suraj Venjaramoodu in Mohanlal film Empuraan
Prithviraj Mohanlal starrer Empuraan film update out
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு மோகன்லால் 25 படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார். சந்தியாக்கு விரிஞ்ச பூவு மற்றும் குயிலினே தேடி ஆகியவற்றில் அவரது எதிர்மறை பாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை.
mohanlal with Suchitra Mohanlal
1986 ஆம் ஆண்டில், மோகன்லால் தனது திரையுலக வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு படம் வெளியானது.. 1986ல் மட்டும் மோகன்லால் நடித்த 34 படங்கள் வெளியானது. இது ஒரே வருடத்தில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்தது. இந்த 34 படங்களில் 25 படங்கள் வெற்றி பெற்றன. அந்த காலகட்டத்தில், ஆண்டுக்கு சராசரியாக 20 மோகன்லால் படங்கள் வெளியானது. தனது 40 ஆண்டு கால வாழ்க்கையில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
mohanlal with Suchitra Mohanlal
தனது நடிப்புக்காக அவர் பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். அந்த வகையில் 2001 இல் பத்மஸ்ரீ மற்றும் 2019 இல் பத்ம பூஷன் உட்பட பல விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளது. பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டில், பிராந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவியைப் பெற்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் மோகன்லால் பெற்றார்.