Rashmika Mandanna: கருகரு கருப்பாயி... பிளாக் கலர் சேலையில் குஷி பட ஜோதிகாவாக மாறிய ராஷ்மிகா! கியூட் போட்டோஸ்!
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கருப்பு நிற சேலையில், கண்ணை கவரும் அழகு தேவதையாக மாறி போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கருப்பு நிற சேலையில், கண்ணை கவரும் அழகு தேவதையாக மாறி போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அதே போல் பாலிவுட் திரையுலகிலும் நாளுக்கு நாள் இவரின் மார்க்கெட், ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. தனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் செய்து இளம் நெஞ்சங்களுக்கு பிராகெட் போட்டு வரும் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் சாரீ போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா வாய்ப்பு தேடிய காலத்தில், கன்னட திரையுலகில் தான் அறிமுகமானார். இதை தொடர்ந்து முன்னணி நடிகரின் காதல் வலையில் சிக்கி திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர், தெலுங்கில் விஜய் தேவரகொண்ட ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம், படத்தின் வெற்றி தான், இவர் திருமணத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் சினிமாவில் முழு கவனம் செலுத்த காரணம் என சொல்லப்பட்டது.
இதை தொடர்ந்து டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ரஷ்மிகா விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அம்மணி அடுத்தடுத்த படங்களில் நடித்து, நாளுக்கு நாள் திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறது.
தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்த இவர், இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். விரைவில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ள, 'அனிமல்' வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து, சில பாலிவுட் படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவது ஒருபுறம் இருக்க, தனுஷுக்கு ஜோடியாக D 51 படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், கருப்பு நிற சேலையில் குஷி பட ஜோதிகாவுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், கருப்பு நிற சேலையில்... இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D