'வானத்தை போல' சீரியல் ஹீரோ கார்த்திக்கிற்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து.!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'வானத்தை போல' சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் கார்த்திக்கும் அவரின் காதலி காயத்ரிக்கு இன்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சென்னையை சேர்ந்த அஸ்வின் கார்த்திக், சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக... கல்லூரியில் படிக்கும் போதே, திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் வாய்ப்புகளை தேட துவங்கினார்.
இதை தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட இவர், அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
குறிப்பாக பிரியமானவள், குல தெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை, றெக்க கட்டி பறக்குது மனசு, அரண்மனை கிளி, போன்ற சீரியல்களில் இவரது நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'வானத்தை போல' சீரியலில் ராஜ பாண்டி என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹீரோவாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய வில்லத்தனத்தையும் காட்டி மிரளவைப்பார்.
இந்நிலையில் இவர் காயத்ரி கணசேகரன் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இந்த ஜோடிக்கு செப்டெம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதை தொடர்ந்து, கார்த்தி மற்றும் காயத்ரிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் கார்த்தி - காயத்ரி ஆகிய இருவர் வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். சீரியல் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டு இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். காயத்ரி, மேக் அப் ஆர்டிஸ்ட்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.