Vanitha Vijayakumar: நீ மன்னிப்பு கேட்க வேண்டாம்... அசிங்கப்பட வேண்டாம்! ஐஷுவுக்கு ஆதரவாக வனிதா விஜயகுமார்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மோசமான விமர்சனங்களுடன் வெளியேறிய ஐஷு, மிகவும் உருக்கமாக கடிதம் வெளியிட்டு தன்னுடைய மன்னிப்பை கோரிய நிலையில், பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான வனிதா விஜயகுமார் நீ மன்னிப்பு கோர வேண்டியது அவசியம் இல்லை என தன்னுடைய ஆதரவை ஐஷுவுக்கு எக்ஸ் தளத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி துவங்கிய நிலையில், 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக ஐஷுவும் களமிறங்கினார். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக விளையாடி வந்த இவர், நிக்சனின் காதல் வலையில் சிக்கிய பின்னர், தன்னிலை மறந்து... தானாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு, பிறர் சொல்வதை கேட்டு விளையாடினார். இதனால் இவருக்கு அறிவுரை கூறிய பலரை எதிர்த்து சண்டை போட்டார்.
BB Tamil 7
குறிப்பாக யுகேந்திரன், விசித்ரா, அர்ச்சனா, மணி, போன்ற பலரிடம் தன்னுடைய வெறுப்பை காட்டினார் ஐஷு. ஒரு மிகப்பெரிய கனவுடன், பிக்பாஸ் வீட்டில் நுழைந்த இவர் நிக்சனுடன் எந்நேரமும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்த வீடியோக்கள் வெளியாகி இவரின் விளையாட்டை நிலைகுலைய செய்ததோடு, மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வெளியேறியது முதல் தன்னுடைய எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த ஐஷு, திடீரென இன்று மூன்று பக்க கடிதம் வெளியிட்டு அதில் தன்னுடைய தவறுகளை உணர்ந்து விட்டதாகவும், ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதிபிடமும் உருக்கமாக மன்னிப்பு கேட்டார்.
vanitha vijayakumar BB
மேலும் தன்னை பற்றி எந்த கருத்து வேண்டுமானாலும் கூறுங்கள், ஆனால் தன்னுடைய குடும்பத்தினரை அவமதிக்க வேண்டாம் என கூறியிருந்தார் ஐஷு. எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும் மனம் உருகி இவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, பலர் இவருக்கு ஆதரவாக தங்களின் கருத்தை பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான வனிதா விஜயகுமார் தன்னுடைய ஆதரவை ஐஷுவுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பற்றி எந்த கருத்து வேண்டுமானாலும் கூறுங்கள், ஆனால் தன்னுடைய குடும்பத்தினரை அவமதிக்க வேண்டாம் என கூறியிருந்தார் ஐஷு. எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும் மனம் உருகி இவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, பலர் இவருக்கு ஆதரவாக தங்களின் கருத்தை பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான வனிதா விஜயகுமார் தன்னுடைய ஆதரவை ஐஷுவுக்கு தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில் எல்லாருமே இங்கு தவறு செய்கிறார்கள். அதனால் உன்னுடைய தவறை சொல்வதை நிறுத்து, நீ அசிங்கப்பட தேவையில்லை. நீ யார் என்பது உனக்கு தெரியும், உன்னை நினைத்து நீ பெருமை பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D