Karthika Nair: கேரள முறைப்படி நடந்த நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்! பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு இன்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், பல பிரபலங்கள் இவரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
நடிகையும், ராதாவின் மகளுமான கார்த்திகாவிற்கு... இன்று திருவனந்தபுரத்தில் உள்ள காவடியார் உதயபாலஸ் மாநாட்டு அரங்கில், கேரள பாரம்பரிய முறைப்படி இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, முதல் நடிகை ராதிகா, சுஹாசினி, ரேவதி, மேனகா, பாக்யராஜ், பூர்ணிமா, ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தன்னுடைய வருங்கால கணவர் பற்றிய தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்துவந்த இவர், கடந்த வாரம்... தன்னுடைய காதல் கணவருடன் நிச்சயதார்த்தத்தில் எடுத்த கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டார்.
அதன்படி கார்த்திகா ரோஹித் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். பல வருடங்களாக இருவரும் காதலித்த நிலையில், தற்போது பெற்றோர் ரோஹித் - கார்த்திகா ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் மூலம் அறிமுகமான கார்த்திகா நாயர், பின்னர் தமிழில் கோ படத்தின் மூலம் கதாநாயகியானார். ஜீவாவுக்கு ஜோடியாக இவர் நடித்த முதல் படமே, தாறுமாறு ஹிட் அடித்த நிலையில், இதை தொடர்ந்து, பொறம்போக்கு என்கிற பொது உடைமை, அன்னக்கொடி போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார்.
இவர் நடித்த படங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால், திரையுலகில் இருந்து விலகிய கார்த்திகா, தன்னுடைய அப்பாவின் பிஸ்னசை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.