செம்ம கியூட்! சுந்தர் சீரியல் நடிகர் அரவிஷை கரம் பிடிக்கும் நடிகை ஹரிகா! காதல் பொங்கும் நிச்சயதார்த்த போட்டோஸ்
சீரியல் நடிகர் அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராம்.. ஸ்டோரியில் தங்களின் என்கேஜ்மென்ட் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
சீரியல் நடிகர் அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராம்.. ஸ்டோரியில் தங்களின் என்கேஜ்மென்ட் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
சமீப காலமாக, சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் நடிகர் - நடிகைகள் பலர் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது. ஒரு சிலர் தங்களுடன் நடித்திராத நடிகர் - நடிகைகளை கூட காதலித்து கரம் பிடிக்கின்றனர்.
ஆனால் இது ஷபானா - ஆர்யன் போல் ரேர் ஜோடி தான். ஆல்யா மானசா - சஞ்சய், சித்து ஸ்ரேயா, மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா, மஹாலட்சுமி - தினேஷ், போன்ற பலர் ஒரே சீரியலில் நடித்து பின்னர் காதலிக்க துவங்கி திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
இப்படி சின்னத்திரை ஜோடிகள் லிஸ்டில் தற்போது புதிதாக இணைய உள்ளனர் அரவிஷ் - ஹரிகா ஜோடி. அரவிஷ், ஒரு டான்சராக 'மானாட மயிலாட' போன்ற நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி பின்னர், சுந்தரி, இலக்கியா, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரும், சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த... 'திருமகள்' சீரியலில் நடித்து வந்த, ஹரிகா சாதுவும் காதலித்து வந்த நிலையில், இந்த ஜோடி தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் இரு குடும்பத்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
திருமண நிச்சயதார்த்தம் குறித்த, சில போட்டோசை இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டாசில் வெளியிட்டு, தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D