- Home
- Gallery
- சட்டையை கழட்டி கொடுத்த கார்த்தி... காதல் போதையில் ரம்யா; கடுப்பான தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
சட்டையை கழட்டி கொடுத்த கார்த்தி... காதல் போதையில் ரம்யா; கடுப்பான தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பூஜையறையில் சீலிங் இடிந்து விழுந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பூஜையறையில் சீலிங் இடிந்து விழுந்து கருநாகம் இருக்க, ஜோசியர் இந்த வீட்டில் கொஞ்ச நாளைக்கு யாரும் இருக்க கூடாது என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Karthigai deepam serial
அதாவது, அபிராமி ஜோசியர் இப்படி சொன்னதால் கொஞ்ச நாளைக்கு இந்த வீட்டில் இருக்க வேண்டாம், பழைய வீட்டிற்கு போகலாம், அந்த வீட்டை ரெடி பண்ண சொல்லுங்க என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா கொத்தனாரையும் பாம்பை விட்டவனையும் வர வைத்து சொன்ன வேலையை கச்சிதமா முடிச்சிடீங்க, இந்தாங்க பணம் என்று கொடுத்து அனுப்புகிறாள்.
இதையும் படியுங்கள்... நகைகளை நைஸாக அபேஸ் பண்ண பார்க்கும் சௌந்தரபாண்டி.. இசக்கி வைத்த செம்ம ட்விஸ்ட் - அண்ணா சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Update
மறுபக்கம் ரம்யா கார்த்திக் பெயரில் கிப்டாக வந்த புடவையை அணிந்து அப்பாவிடம் காட்டி சந்தோசப்படுகிறாள். பிறகு அதே புடவையில் கம்பெனிக்கு வந்து கார்த்திக் முன்னாடி நடந்து காட்டி சந்தோசப்பட, கார்த்திக் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறான். பிறகு ரம்யா ரவுண்ட்ஸ் போகும் போது சேரி மிஷின் ஒன்றில் மாட்டி கொள்ள, கார்த்திக் ரம்யாவை காப்பாற்றி அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டி கொடுக்கிறான்.
Karthigai deepam serial Today Episode
இதனால் ரம்யாவுக்கு கார்த்திக் மீது காதல் அதிகமாக, அவள் அந்த சட்டையை முகர்ந்து பார்த்து சந்தோசப்படுகிறாள். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர, தீபா சட்டையை பற்றி கேட்க, கார்த்திக் சொன்ன பதிலால் நீங்க எப்படி உங்க சட்டையை கழட்டி கொடுக்கலாம். ஒரு ஆம்பளையோட சட்டையை ஒன்னு தங்கச்சி போடணும், இல்லனா பொண்டாட்டி போடணும் என்று பொஸசிவ்வில் பேசி கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... நினைத்தேன் வந்தாய் சீரியல் : குடிபோதையில் எழில்... யாருக்கும் தெரியாமல் இந்துவின் சமாதிக்கு சென்ற குழந்தைகள்