Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் ஓர் ஐந்தருவி; தொட்டியில் இருந்து வெளியேறிய நீரில் குடும்பமாக குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்

கூட்டுக் குடிநீருக்காக கட்டப்பட்ட தொட்டியில் தேங்கிய மழைநீர் அருவி போல் கொட்டியதால் அவ்வழியாக வந்த இளைஞர்கள் அந்த நீரில் குளித்து மகிழ்ந்தனர்.

In Madurai, people enjoy bathing in the water that came out of the water tank vel
Author
First Published May 21, 2024, 4:35 PM IST | Last Updated May 21, 2024, 4:35 PM IST

மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய உயர் மட்ட தொட்டி அருகில் புதிதாக  கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக உயர்மட்ட தொட்டியில் தண்ணீர் தேங்கிய நீர் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

உயிர்பலிகள் அதிகரித்தாலும் துளியும் அச்சமில்லை; சிவகாசியில் 3 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து - அதிகாரிகள் அதிரடி

இதனிடையே அந்தப் பகுதி வழியாக சென்ற இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உற்சாக மிகுதியில் உயர் மட்ட தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் குளித்தனர். மேலும் அந்த வழியே செல்கின்ற ஆட்டோ, கார் உரிமையாளர்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தி தங்களது வாகனத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.

கோடை மழைக்கே தாக்குபிடிக்காத கலைஞர் நூற்றாண்டு நூலகம்; 2 பிரிவுகள் மூடப்பட்டதால் வாசகர்கள் ஏமாற்றம்

கூட்டுக் குடிநீர் உயர் மட்ட தொட்டி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும், சோதனை முயற்சியில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தொட்டியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் மதுரை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios