MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு!

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, முக்கிய போட்டியாளரான பவா செல்லத்துரை இதய பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 09 2024, 07:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஆண்டு (அக்டோபர் 1-ஆம்) தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இதில்,  90'ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நாயகி விசித்ரா முதல், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா, ரவீனா தாஹா, சீரியல் நடிகர் விஷ்ணு, நடிகை மாயா, யூ டியூபர் பூர்ணிமா ரவி, எழுத்தாளர் பவா செல்லதுரை உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

25
Bava Chelladurai

Bava Chelladurai

முதல் வாரத்திலேயே, பிரபல மாடலான அனன்யா ராவ் வெளியேறிய நிலையில், இவரை தொடர்ந்து... இந்திய எழுத்தாளர், கதை சொல்பவர், நடிகர், இலக்கிய ஆர்வலர், விவசாயி என பன்முக திறமையாளராக அறியப்படும் பவா செல்லதுரை உடல் நலன் பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

Lal Salaam: தனுஷுடன் மோத முடியாமல்.. பொங்கல் ரிலீஸில் பின்வாங்கிய 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 

35

இவரது வெளியேற்றவும்... ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், உடல் நல பிரச்சனை காரணமாக வெளியேறுவதால் ரசிகர்களும் அவரது வெளியேற்றத்தை ஏற்று கொண்டனர். முதல் வாரத்திலேயே அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதால் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

45

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்... தன்னுடைய அன்றாட பணிகளில் இவர் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது இவர் இதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rashid Khan: அதிர்ச்சி... பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

55

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய பவா செல்லதுரைக்கு, இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பவா செல்லதுரை 'ஜெய்பீம்', 'ஜோக்கர்', 'வெந்து தணிந்தது காடு' , சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜிகர்தண்டா 2' ஆகிய பல  வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved