MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rashid Khan: அதிர்ச்சி... பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Rashid Khan: அதிர்ச்சி... பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

பத்மஸ்ரீ விருது பெற்ற, பாடகர் உஸ்தாத் ரஷித் கான் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jan 09 2024, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மியூசிக் மேஸ்ட்ரோ என ரசிகர்களாலும், பிரபலங்களாலும் அழைக்கப்படும், உஸ்தாத் ரஷீத் கான் தனது 55வது வயதில் இன்று (செவ்வாய் கிழமை) 3:45 மணிக்கு காலமானார். கடந்த சில வருடங்களாக புரோஸ்டேட் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரஷித் கான், கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

24

இவரது உடல் இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இதை தொடர்ந்து அவரது உடல் கொல்கத்தாவில் உள்ள பீஸ் ஹேவனுக்கு அனுப்பப்பட உள்ளது. நாளை இவரது இறுதி சடங்குகள் குடும்ப முறைப்படி நடைபெற உள்ளன.

இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? விஜய் சேதுபதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
 

34

ஜூலை 1-ஆம் தேதி 1968 இல் பிறந்த உஸ்தாத் ரஷித் கான், ஹிந்துஸ்தானி இசை பாரம்பரியத்தின்... பாரம்பரிய இசைக்கலைஞர் ஆவார். அவர் ராம்புரா- சஹாஸ்வான் கரானாவைச் சேர்ந்தவர் மற்றும் கரானாவின் நிறுவனர் இனாயத் ஹுசைன் கானின் பேரன் ஆவார். பாரத ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷி ஒருமுறை ரஷித் கானின் குரலை இந்திய குரல் இசையின் எதிர்கால நம்பிக்கை என்று பாராட்டினார்.
 

44

2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது. இவர் ஒரு ஹிந்துஸ்தானி இசை கலைஞராக இருந்தாலும், ஃப்யூஷன், பாலிவுட், டோலிவுட் போன்ற பல மொழி படங்களில் பிரபலமான பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு மனைவி இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Shakeela Love: தன்னை விட வயதில் குறைவான... அஜித் மச்சினன் ரிஷியுடன் ஷகீலாவுக்கு மலர்ந்த காதல்! இது எப்போ?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்தியா
இசை
புற்றுநோய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved