Asianet News TamilAsianet News Tamil

இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? விஜய் சேதுபதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!

நடிகர் விஜய் சேதுபதி, 'மெர்ரி கிறித்துமஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது... இந்தி திணிப்பு குறித்து, பேசியதை தொடர்ந்து... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜய் சேதுபதியை நோக்கி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 

BJP Tamil Nadu President Annamalai replay to vijay sethupathi mma
Author
First Published Jan 9, 2024, 4:50 PM IST

அதாவது பட விழாவில் கலந்து  கொண்ட நடிகர் விஜய் சேதுபதியிடம், "ஹிந்தி தெரியாது போடா" என்கின்ற வசனங்களை நாம் கூறுகிறோம் ஆனால் நீங்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கின்றீர்களே இது நியாயமா? என்று கேள்விகள் கேட்ட பொழுது, இங்கே ஹிந்தி திணிப்பு தான் வேண்டாம் என்று கூறுகின்றனர், ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அப்புறம் இப்போ எதுக்கு இந்த கேள்வி? என்று சற்று கோபமாக பதில்  கூறி இருந்தார்.

நடிகர் விஜய்சேதுபதி ‘இந்தியை திணிக்க கூடாது’ என்று பேசியது குறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று அளித்த பேட்டி, ‘‘ஜவான் படத்துல விஜய்சேதுபதி வில்லனாக சிறப்பாக நடித்து இருக்கிறார். சப் டைட்டில் இல்லாமல் அதை பார்த்தால், அது இந்தியை திணிப்பதா? கற்றுகொடுப்பதா? அது விவாத பொருள். இந்தி உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்பதுதான் பாயின்ட். 

BJP Tamil Nadu President Annamalai replay to vijay sethupathi mma

Shakeela Love: தன்னை விட வயதில் குறைவான... அஜித் மச்சினன் ரிஷியுடன் ஷகீலாவுக்கு மலர்ந்த காதல்! இது எப்போ?

ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவன தயாரிப்பில் அவர் நடிக்கிறார். விஜய்சேதுபதி கருத்து எதுவும் சொல்லவில்லை. அது அவர் உரிமை. அவர் இந்தி, போஜ்புரி, தமிழ் என எதிலும் நடிக்கட்டும். அவர் உரிமை. அதே சமயம் கருத்துக்கு சொல்லும்போது இரண்டு பக்கமும் பார்க்கணும்.  தமிழகத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் இந்தியா முழுக்க ,வட இந்தியாவில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தைவிட பெங்களூர் ஓகே. அங்கே மொழி பிரச்னை இல்லை. இங்கே தமிழில்தான் பேச வேண்டியது இருக்கிறது என்கிறார்கள். 

BJP Tamil Nadu President Annamalai replay to vijay sethupathi mma

Sun Tv Serial: முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்! 'அருவி' சீரியலில் ஏற்படும் முக்கிய மாற்றம்?

இதுபோன்ற மொழி பிரச்னையால் தமிழகத்தில் முதலீடு வாய்ப்புகள் குறைகிறது. இந்தி விருப்பம் இருந்தால் படியுங்க. வேண்டாம் என்றால் விட்டுவிடுங்க. நாங்க 3 மொழி கொள்கையை  சொல்றோம். இந்திபடியுங்கனு மோடி சொல்லவில்லை. கட்டாயம், தமிழ், ஆங்கிலம் படிக்கணும். 3வது மொழியாக உங்களுக்கு தேவைப்படும் மொழியை படியுங்க என்கிறோம். இது எங்க கருத்து, விஜய்சேதுபதிக்கு பதில் அல்ல, 4, 5 மொழி கூட படியுங்க. நாளைக்கு நீங்க குளோபல் சிட்டிசன்.  நாளை வெறும் 2 மொழிவைத்துக்கொண்டு எங்கேயும் போக முடியாது. கூடுதல் மொழி தேவை. இந்தி பிடிக்காவிட்டால் பிரெஞ்சு, ஜெர்மன் படித்து ஐரோப்பாவில் வேலை செய்யுங்க.  இந்தியை நாங்க திணிக்கவில்லை. அதேசமயம், விஜய்சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமானு கேட்கமாட்டோம்.அவர் அவரின் தனித்திறமை. அவர் விருப்பம். நாங்க ஏதாவது சொன்னால் தவறாக போய்விடும். அவர் படத்தை நாங்க கைதட்டி ரசித்துவிட்டு போறோம்.

Follow Us:
Download App:
  • android
  • ios