MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shakeela Love: தன்னை விட வயதில் குறைவான... அஜித் மச்சினன் ரிஷியுடன் ஷகீலாவுக்கு மலர்ந்த காதல்! இது எப்போ?

Shakeela Love: தன்னை விட வயதில் குறைவான... அஜித் மச்சினன் ரிஷியுடன் ஷகீலாவுக்கு மலர்ந்த காதல்! இது எப்போ?

கவர்ச்சி நாயகி என்கிற அடையாளத்துடன், தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்களை வசீகரித்த, ஷகீலா தற்போது, அஜித்தின் மச்சினன் ரிஷி ரிச்சர்டுடன் தனக்கு இருந்த காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 09 2024, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழில் கடந்த 1994-ஆம்  ஆண்டு 'ப்ளே கேர்ள்ஸ்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷகீலா. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்த நிலையில், ஷகிலா அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே, மிகவும் போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து, பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.
 

29

ஷகிலாவை அறிமுகம் செய்தது தமிழ் திரையுலகம் என்றாலும், ஷகிலாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது மலையாள திரையுலகம் தான். குறிப்பாக ஷகிலா நடித்து வெளியான கவர்ச்சி திரைப்படமான 'கின்னார தும்பிகள்', 'ரெண்டு பெண்குட்டிகள்', 'மிஸ் சுவர்ணா'  போன்ற திரைப்படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கே கலெக்ஷனின் சவால் விட்டது.

Sun Tv Serial: முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்! 'அருவி' சீரியலில் ஏற்படும் முக்கிய மாற்றம்?
 

39

எனவே ஒரு கட்டத்தில், ஷகீலாவின் படம் வெளியாகிறது என்றால் சில மலையாள முன்னணி நடிகர்கள் கூட தங்களுடைய படங்களை ரிலீஸ் பண்ணுவதற்கு தயக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
 

49

உச்சத்தில் இருந்த ஷகிலாவை வீழ்த்தும் நோக்கில் சிலர் செயல்பட்டதால், கமிட் ஆகி அட்வான்ஸாக பெற்ற மொத்த பணத்தையும் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, மலையாள படங்களில் இனி நடிக்க மாட்டேன் என கூறினார். இதை தொடர்ந்து சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தாலும்... சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் அமையவில்லை.

Deviyani Sharma: சிம்புவுடன் ஜோடி போட்டே தீருவேன்..! அடம் பிடிக்கும் இளம் நடிகை தேவயானி ஷர்மா..!
 

59

கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை உடைத்து... ஷகிலாவின் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஷகீலா கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மூலம், நடிக்க மட்டுமல்ல... சூப்பராக சமைக்கவும் முடியும் என்பதை நிரூபித்தார். 
 

69

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்து பல மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சகிலா, பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 14வது நாளில் வெளியேறினார். மேலும் youtube தளங்களில், பிரபலங்களை பேட்டி எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலமே இவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்டாக மாஸ் எண்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் யார்... யார்?- பிரதீப் ஆண்டனியும் வருகிறாரா?
 

79

இந்நிலையில் ஷகிலா, தன்னுடைய காதலர் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. பொதுவாக  தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி பேசுபவர் ஷகிலா. அந்த வகையில் ஏற்கனவே 10 பேரையாவது நான் காதலித்திருப்பேன் என்பதை பல முறை ஓப்பனாகவே கூறியுள்ளார்.
 

89

தன்னுடைய 10 வயதுலையே சுரேஷ் ரெட்டி என்பவரை காதலித்ததாகவும், அவரை காதலிக்கும் போதே பள்ளியில் படித்த மாணவர் ஒருவரையும் காதலித்ததாகவும் தன்னுடைய பப்பி லவ் பற்றியும், அடல்ட் வயதில் காதலித்த லவ் குறித்தும் பேசியுள்ளார்.

Babloo Prithiveeraj: பிரிந்த வேகத்தில்.. 24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
 

99

அந்த வகையில், அஜித்தின் மச்சினன் ரிஷியுடனான காதல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். 15 வயதில் தனக்கும், ரிஷி ரிச்சர்டுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், காலப்போக்கில் அது காதலாக மலர்ந்ததாகவும்... எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் இருந்தோம், ஆனால் அப்படி ஒரு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. எனினும் தற்போது வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். ரிஷி ஷகிலாவை விட நான்கு வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved