- Home
- Gallery
- Deviyani Sharma: சிம்புவுடன் ஜோடி போட்டே தீருவேன்..! அடம் பிடிக்கும் இளம் நடிகை தேவயானி ஷர்மா..!
Deviyani Sharma: சிம்புவுடன் ஜோடி போட்டே தீருவேன்..! அடம் பிடிக்கும் இளம் நடிகை தேவயானி ஷர்மா..!
நடிகை சிம்புவுடன் ஜோடி போட்டே தீருவேன் என இளம் நடிகை தேவயானி ஷர்மா அடம்பிடித்து வருவதோடு, அதற்கான வேளையிலும் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர், 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகில் அறிமுமாகமானார்.
பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்ற தேவயானி ஷர்மா, நடிப்பு பயிற்சி மற்றும் சில தற்காப்பு கலையிலும் காய் தேர்ந்தவர். தன்னுடைய ஆசை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட, தேவயானி ஷர்மா ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் படம் பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது.
சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. மேலும் கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால், சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கலக்கும் தேவயானி ஷர்மா தமிழிலும் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.