MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Babloo Prithiveeraj: பிரிந்த வேகத்தில்.. 24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

Babloo Prithiveeraj: பிரிந்த வேகத்தில்.. 24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

நடிகர் பப்லு பிரித்திவீராஜ்... தன்னுடைய 24 வயது காதலியை திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே பிரிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இணைந்து விட்டதை உறுதி செய்துள்ளது செல்ஃபி புகைப்படம். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 08 2024, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில்... குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாகி பின்னர், ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும்,  முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் 2ஆவது நாயகனாக நடித்து பிரபலமானவர் பிரித்திவீராஜ். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Babloo

Babloo

90'ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பரிச்சியமான பப்லு, சிம்பு நடுவராக இருந்த போது ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்று அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், தன்னுடைய ஹோட்டல் பிசினசை பார்த்து கொண்டே, சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவரா' படத்தின் கிளிம்ப்ஸி வீடியோ வெளியானது!

38

அந்த வகையில், 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் ராதிகாவின் கணவராக நடித்தார். இந்த சீரியல் நடித்து முடித்த பின்னர் ராதிகா பற்றியே சர்ச்சையான விதத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

48

கடந்த ஆண்டு நிறைவடைந்த, 'கண்ணானே கண்ணே' சீரியலிலும் கதாநாயகியின் தந்தையாக நடித்திருந்தார். சீரியலில் அப்பா வேடத்தில்நடித்தாலும் , நிஜத்தில் காதல் மன்னன் பப்லு பிரித்திவிராஜ் . 

சென்னையில் இருந்தும் 'கலைஞர் 100' விழாவில் கலந்து கொள்ளாத விஜய் - அஜித்! காரணம் கமல் - ரஜினியா?
 

58

இவர் ஏற்கனவே பீனா என்பவரை, கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 27 வயதில் ஆட்டிசம் குறைபாடு உள்ள மகன் ஒருவரும் உள்ளார். திருமணம் ஆகி 18 வருடங்களுக்கு மேல் ஒன்றாக இருந்த இவர்கள், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னர் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்... ஷீத்தல் என்கிற இளம் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

68

தன்னுடைய மகனை விட குறைந்த வயதுடைய ஷீத்தலுடன்... அடிக்கடி ரீல்ஸ் செய்து போட்டு, பப்லு தங்களுடைய காதலின் நெருக்கத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

Salaar: தமிழ்நாட்டில் படு தோல்வி.! உலக அளவில் வசூலை வாரி குவித்த 'சலார்'.. சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு!
 

78

இதுகுறித்து பப்லு சில பேட்டிகளிலும் உறுதி செய்தார். இருவரும் பிரிந்திருந்த நிலையில்... தற்போது மீண்டும் சேர்ந்து விட்டதாக தெரிகிறது. பப்லு, ரன்பீர் கபூர் மற்றும் ரஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தின் சக்ஸஸ் மீட் மும்பையில் நடந்துள்ளது. இதில் பப்லு, ஷீத்தலுடன் கலந்து கொண்டுள்ளார். 

88

அனிமல் பட பிரபலங்களுடன் பப்லு எடுத்து கொண்ட புகைப்படங்களும், ராஷ்மிகாவுடன்... ஷீத்தல் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படமும் சமூக வலைத்தளத்தில், தீயாக பரவி வருகிறது.

Ajith Family: கியூட் ஹீரோயின் போல் இருக்கும் அனோஷ்கா! மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நட்சத்திர ஓட்டலில் அஜித்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved