நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை; உயிர் பயத்தில் வீட்டிற்குள் பதுங்கிய மக்கள்

கோவை துடியலூர் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை உணவு தேடி அலைந்து திரியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

forest elephant roaming residential area in coimbatore vel

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாக உள்ள ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப் போது உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, வீரபாண்டி, தடாகம், பாப்பநாயக்கன் பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.

பழமை வாய்ந்த சக்தி மாரியம்மன் ஆலயத்தில் நடனமாடி பரவச நிலையில் எஸ்.பி.வேலுமணி

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை உணவு தேடி அங்கு இருந்த குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் அங்கு இருந்த நாய்கள் குரைக்கத் தொடங்கின. இருந்த போது அந்த யானை வீட்டைச் சுற்றி சுற்றி உணவு தேடியது. அப்போது அங்கு இருந்த அரிசி மூட்டையை தூக்கி வீசி அதைத் தின்று சேதப்படுத்தி உள்ளது.

மனைவியை தீர்த்து கட்ட ஸ்கெட்ச் போட்ட கணவன்; திடீரென குறுக்கே வந்த மாமனார் - தஞ்சையில் பரபரப்பு

மேலும் அங்கு நிறுத்தி இயிருந்த டிராக்டரிலும் ஏதாவது உணவு இருக்குமா என தேடியது. கிடைக்காததால் அங்கு இருந்து சென்று விட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது காட்டு யானை இருப்பதை கண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிட்டனர். 

இது அங்கு பொருத்தி இருந்த சி.சி.டி.வி யில் பதிவாகி இருந்தது அது தற்போது வெளியாகி உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios