MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Lal Salaam: தனுஷுடன் மோத முடியாமல்.. பொங்கல் ரிலீஸில் பின்வாங்கிய 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Lal Salaam: தனுஷுடன் மோத முடியாமல்.. பொங்கல் ரிலீஸில் பின்வாங்கிய 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'  திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 09 2024, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் தனுஷை வைத்து இயக்கிய '3' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஸ்ருதிஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இப்படம், மனநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனையை பேசக்கூடிய படமாக இருந்தது.

26

கலவையான விமர்சனங்களை பேற்றை '3' படத்தை தொடந்து, கௌதம் கார்த்தி மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான, 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார். பின்னர் 'சினிமா வீரன்' என்கிற டாக்குமென்டரி படத்தையும் இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய கணவர் தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த பின்னர், தற்போது 'லால் சலாம்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Rashid Khan: அதிர்ச்சி... பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
 

36
Lal Salaam Update

Lal Salaam Update

'லைகா' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஹீரோயின்கள் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
 

46

ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற எக்ஸ்டெண்டெட் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா, உள்ளிட்ட பலர் முக்கிய இடத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்தை தொடர்ந்து இப்படத்தில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Shakeela Love: தன்னை விட வயதில் குறைவான... அஜித் மச்சினன் ரிஷியுடன் ஷகீலாவுக்கு மலர்ந்த காதல்! இது எப்போ?

56

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்... அதற்கான பிரமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் மோத உள்ளார் மோத உள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில்... கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது லால் சலாம்.
 

66

அதாவது லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் அருண் விஜய் நடிப்பில், ஏ.எல்.விஜய் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் பொங்கல் ரிலீஸ் ஆக உள்ளதால், 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி மற்றொரு தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சற்று முன் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி ஒன்பதாம் தேதி, லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sun Tv Serial: முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்! 'அருவி' சீரியலில் ஏற்படும் முக்கிய மாற்றம்?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved