MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ajith Photography: விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ கிராபராக மாறிய அஜித்! பிரபலங்களின் கேண்டிட் கிளிக்ஸ்

Ajith Photography: விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ கிராபராக மாறிய அஜித்! பிரபலங்களின் கேண்டிட் கிளிக்ஸ்

தல அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃபராக மாறி, பிரபலங்கள் சிலரை எடுத்த கேண்டிட் போட்டோசை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Dec 15 2023, 04:27 PM IST| Updated : Dec 15 2023, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்த ஆண்டு நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து... பொங்கல் விருந்தாக வெளியான 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62-ஆவது படத்தை நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார். அவருக்கு பதில் மகிழ் திருமேனிக்கு அஜித்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. 

24

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில், கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும்... படக்குழு அஜர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில், திரிஷா மற்றும் அஜித்தின் பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் இந்த முறை, ஆரவ், ரெஜினா, அர்ஜுன் போன்ற பிரபலங்களின் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது.

பிரபு மகள் ஐஸ்வர்யா - ஆதிக் திருமணத்தில்.. ஒன்று கூடிய முன்னணி நடிகர்கள் முதல் 80'ஸ் பிரபலங்கள் வரை! போட்டோஸ்!

34

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 70 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அஜித் 'விடாமுயற்சி' ஷூட்டிங் ஸ்பாட்டில்... போட்டோ கிராப்பராக மாறி அர்ஜுன், மகிழ் திருமேனி, ரெஜினா, மற்றும் ஓம் ராவத் ஆகியோரை படம்பிடித்த கேண்டிட் போட்டோஸ் சிலவற்றை... அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாகி வருகிறது.

களைகட்டிய பிரபு மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம்! நேரில் வந்து வாழ்த்திய ‘லெஜண்ட்’ சரவணன்!

44

அஜித் முறையாக போட்டோ கிராஃபி தெரிந்தவர் என்பதை நமக்கு தெரிந்தாலும், எப்போதாவது தான் அவர் படம்பிடித்த புகைப்படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள போட்டோஷா தல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved