கவுத்திவிட்ட லால் சலாம்.. சைலண்டாக அடுத்த பட பணிகளை தொடங்கிய ரஜினி மகள்- அடடே ‘இந்தியன் 2’ நடிகர் தான் ஹீரோவா?
லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள அடுத்த படத்தில் இந்தியன் 2 பட நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
Aishwarya Rajinikanth
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. தற்போது கோலிவுட்டின் சென்சேஷனல் இசையமைப்பாளராக உள்ள அனிருத் அறிமுகமானதும் அப்படத்தின் மூலம். 3 படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும், அதன் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
Lal salaam director Aishwarya Rajinikanth
சமீபத்தில் 3 படம் ரீ-ரிலீஸ் ஆனபோது கூட அனிருத்தின் பாடலுக்கு தியேட்டரில் வைப் செவதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். 3 படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. மேட்ச் பிக்சிங்கை மையமாக வைத்து உருவான இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகிய ஐஸ்வர்யா சுமார் 7 ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார்.
இதையும் படியுங்கள்... பிளைட்டுக்கு லேட் ஆனாலும் பரவால்ல... ரசிகர்களுடன் செல்பி எடுத்துவிட்டு வேட்டையன் ஷூட்டிங் கிளம்பிய ரஜினி
Aishwarya Rajinikanth Next Movie
இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு தான் மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக அறிவித்த ஐஸ்வர்யா, லால் சலாம் என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்க கமிட் ஆனார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இருந்தும் இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. இதனால் இப்படமும் தோல்வி பட்டியலில் இணைந்தது.
Aishwarya Rajinikanth Next Movie hero siddharth
லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின்னர் தற்போது சைலண்டாக அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்திற்கான கதையை நடிகர் சித்தார்த்திடம் சொல்லி உள்ளாராம். அவருக்கும் கதை பிடித்துப்போனதாக கூறப்படுகிறது. கடைசியாக சித்தா என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்த சித்தார்த், தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் முடிந்ததும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அவங்க காதலுக்கு வயது 43.. எல்லா வருஷமும் நடக்கும் கியூட் சடங்கு - செம போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!