Asianet News TamilAsianet News Tamil

பிளைட்டுக்கு லேட் ஆனாலும் பரவால்ல... ரசிகர்களுடன் செல்பி எடுத்துவிட்டு வேட்டையன் ஷூட்டிங் கிளம்பிய ரஜினி

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த், அங்கிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

First Published Feb 27, 2024, 10:49 AM IST | Last Updated Feb 27, 2024, 10:49 AM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் தயாராகி வருகிறது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ரஜினிகாந்த் உடன் ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றார் ரஜினி. அப்போது விமானத்திற்கு லேட் ஆகிவிடும் என்பதனால் பேட்டி கொடுக்காமல் வேகமாக சென்ற ரஜினி, தன்னுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் காத்திருந்ததை அறிந்ததும், அவர்களுக்காக சிறிது நேரம் நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார். அதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Video Top Stories