Aishwarya Rajinikanth : பிரபல இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தாய் மற்றும் தந்தையின் 43வது திருமண நாளன்று எடுத்த ஒரு சூப்பர் போட்டோவை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான "அபூர்வ ராகங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் சிவாஜி ராவ் கேக்வாட் என்கின்ற இயற்பெயர் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய இந்த 49 ஆண்டுகால திரைப்பயணத்தில் அவர் பெறாத புகழே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்திய சினிமாவின் முகமாக, தமிழ் சினிமாவின் பெருமையாக திகழ்ந்து வருகிறார். 

கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இந்த காதலுக்கு சாட்சியாக பிறந்த இரண்டு குழந்தைகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த். தற்போது திரையுலகில் ஈடு இணையற்ற ஒரு மாபெரும் நடிகராக விளங்கிவரும் ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Varun: என் கனவு நிறைவேறி விட்டது! 'ஜோஷ்வா இமை போல் காக்க' படம் குறித்து மெய் சிலிர்த்து பேசிய வருண்!

இன்னும் சொல்லப்போனால் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு வரை அவருடைய படங்களின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நேற்று தனது 43வது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்கள் வீட்டில் நடக்கும் ஒரு க்யூட்டான சடங்கு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விவரித்துள்ளார். 

Scroll to load tweet…

இந்த அருமையான நாளில் 43 ஆண்டுகளுக்கு முன்னதாக ரஜினிகாந்த் மற்றும் லதா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்த பொழுது அவர்கள் மாற்றிக் கொண்ட மோதிரத்தை மீண்டும் ஒருமுறை இருவரும் ஒருவருக்கொருவர் போட்டு விடுவார்களாம். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் அவர்களுக்கு, லதா அவர்கள் 43 ஆண்டுகளுக்கு முன்பு அணிவித்த செயினையும் இந்த நாளில் அணிவிப்பாராம். 43 ஆண்டுகளாக இந்த சடங்கு ஒவ்வொரு வருடமும் நடந்து வருவதாக தனது பதிவில் கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

தாத்தா வழியில் பேத்தி... இயக்குனராகிய பேத்தி மதிவதினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதிராஜா - வைரலாகும் வீடியோ