விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு லீவு போட்டு.. ஃபாரினில் இருந்து கிளம்பி வந்து ரசிகர்களுடன் லியோ FDFS பார்த்த திரிஷா
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், நடிகை திரிஷா ரோகிணி தியேட்டரில் அப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.
Leo movie Trisha
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள லியோ திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் திரிஷா, மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
Actress Trisha
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் லியோ படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Trisha in Leo FDFS
லியோ படக்குழுவினரும் ரசிகர்களோடு படத்தை கண்டுகளித்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் லியோ படத்தின் முதல் காட்சியை கண்டுகளித்தனர். அதேபோல் நடிகை திரிஷாவும், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ படத்தினை ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Trisha watch leo in Rohini Theatre
நடிகை திரிஷா அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டில் இருந்தார். இதன்காரணமாக அவரால் லியோ படத்தின் புரமோஷனிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. ஆனால் லியோ FDFS-வை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த திரிஷா, ரசிகர்களுடன் லியோ படத்தை பார்த்து ரசித்தார். நடிகை திரிஷா லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திரிஷா தலை தப்பியது... லியோவில் லோகேஷ் கனகராஜ் கதம் பண்ணிய ஹீரோயின் யார் தெரியுமா?