MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரிஷா தலை தப்பியது... லியோவில் லோகேஷ் கனகராஜ் கதம் பண்ணிய ஹீரோயின் யார் தெரியுமா?

திரிஷா தலை தப்பியது... லியோவில் லோகேஷ் கனகராஜ் கதம் பண்ணிய ஹீரோயின் யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் திரிஷா கொலை செய்யப்படாவிட்டாலும், அதற்கு பதில் மற்றொரு ஹீரோயினை கதம் பண்ணி உள்ளனர்.

1 Min read
Ganesh A
Published : Oct 19 2023, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
thalapathy vijay lokesh kanagaraj

thalapathy vijay lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்கள் என்றாலே அதில் ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது. அதேபோல் அவரது படங்களில் ஹீரோயின்கள் கொலை செய்யப்படுவதும் ஒரு ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. குறிப்பாக விக்ரம் படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடித்த காயத்ரியை, கழுத்தறுத்து கொலை செய்யும் காட்சியை நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்தனர். அதேபோல் கைதி படத்தில் ஹீரோயினே இல்லாமல் படத்தை எடுத்தையும் ஒப்பிட்டு மீம்ஸ் பறந்தன.

24
Director Lokesh Kanagaraj

Director Lokesh Kanagaraj

இதனிடையே லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரில் தொடங்கியபோதே, அதில் ஹீரோயினாக நடித்த திரிஷா, ஒருசில நாட்களில் காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பினார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியானபோது, லோகேஷ் கனகராஜ் திரிஷாவை படத்தில் கொலை செய்யும் படியான காட்சியை வைத்துள்ளதாகவும், அதனால் தான் திரிஷா ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
madonna sebastian

madonna sebastian

ஆனால் அதெல்லாம் வதந்தி என்பது தற்போது படம் ரிலீசானது மூலம் உறுதியாகி உள்ளது. லியோ படத்தில் திரிஷாவின் கேரக்டரை கொலை செய்யாமல் காட்டி இருக்கும் லோகேஷ் கனகராஜ், மற்றொரு ஹீரோயின் கேரக்டரை தான் கதம் பண்ணி இருக்கிறார். அந்த ஹீரோயின் வேற யாருமில்லை, நாம் பிரேமம் படத்தில் பார்த்து ரசித்த மடோனா செபாஸ்டியன் தான். அவரை தான் இப்படத்தில் கொலை செய்திருக்கிறார்கள்.

44
Vijay, Madonna Sebastians

Vijay, Madonna Sebastians

லியோ படத்தில் நடிகர் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார் மடோனா செபாஸ்டியன். அவரது கேரக்டர் படத்தில் சர்ப்ரைஸாக வைக்கப்பட்டுள்ளதாகவும், நான் ரெடி தான் பாடலுக்கு நடிகர் விஜய்யுடன் சேர்ந்து மடோனா செபாஸ்டியன் நடனமாடும் காட்சிகள் வேறலெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ திரிஷாவைவிட மடோனாவின் கேரக்டர் படத்தில் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அப்பா, அம்மா இல்லாத எனக்கு விஜய் தான் எல்லாமே... லியோ FDFS-வில் காதலியை கரம்பிடித்த விஜய் ரசிகர் நெகிழ்ச்சி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
திரிஷா
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved