MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பதிரனா, தேஷ்பாண்டே இல்லை, ரிச்சர்டு கிளீசன் அறிமுகம் – பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்!

பதிரனா, தேஷ்பாண்டே இல்லை, ரிச்சர்டு கிளீசன் அறிமுகம் – பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 01 2024, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

29
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

அதன்படி, மதீஷா பதிரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளார். மேலும், ரிச்சர்டு கிளீசன் அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் அறிமுகமானவர்களில் தற்போது சிஎஸ்கே அணியில் 36 வயது 151 நாட்கள் நிரம்பிய ரிச்சர்டு கிளீசன் இடம் பெற்றுள்ளார். சென்னையில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

39
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் கடைசியாக விளையாடிய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 28 போட்டிகளில் 15 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இரு அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாடிய 7 போட்டிகளில் 4ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. 2ல் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

49
CSK vs PBKS, 49th IPL 2024 Match

CSK vs PBKS, 49th IPL 2024 Match

மேலும், சேப்பாக்கத்தில் நடைபெற்ற 69 போட்டிகளில் சிஎஸ்கே 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 19 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டை ஆனது. இந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு எஞ்சிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றால் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

59
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

69
CSK vs PBKS, 49th IPL 2024 Match

CSK vs PBKS, 49th IPL 2024 Match

பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

79
Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

Chennai Super Kings vs Punjab Kings, 49th Match

இந்தப் போட்டியில் சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

சிக்சர் மன்னன் ஷிவம் துபே ஒரு சிக்ஸர் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

தோனி 3 சிக்ஸர்கள் அடித்தால், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 250 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ஜானி பேர்ஸ்டோவ் 5 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் வரலாற்றில் 1500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

டேரில் மிட்செல் 51 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 4500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

லியாம் லிவிங்ஸ்டன் 61 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிகெட்டில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

89
Chennai Super Kings vs Punjab Kings,

Chennai Super Kings vs Punjab Kings,

சென்னை சூப்பர் கிங்ஸ்:

அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ரிச்சர்ட் கிளீசன், முஷ்தாபிஜூர் ரஹ்மான்.

99
Chennai Super Kings vs Punjab Kings, 49th IPL 2024

Chennai Super Kings vs Punjab Kings, 49th IPL 2024

பஞ்சாப் கிங்ஸ்:

ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண் (கேப்டன்), ரிலீ ரோஸோவ், ஷஷாங்க் சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அஷூதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் கவுர், ஹர்ஷல் படேல், கஜிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
பஞ்சாப் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved