குடியால் மானமும் போச்சு.. பட வாய்ப்பும் போச்சு! 30 வயதில்.. திருமணத்தை பனையமாக வைத்து ஸ்ரீதிவ்யா எடுத்த சபதம்?
நடிகை ஸ்ரீதிவ்யா தன்னுடைய சபதம் நிறைவேறிய பின்பு தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என முடிவெடுத்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
sri divya
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் கதாநாயகியாக நடித்து, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் தன் மீது திரும்ப வைத்தவர் ஸ்ரீ திவ்யா.
sri divya
இந்த படத்தின் வெற்றி நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது. அந்த வகையில், இரண்டாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காக்கி சட்டை, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஜீவா, விஷாலுக்கு ஜோதிகா ஜோடியாக மருது, அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி, என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமானார்.
sri divya
மிக குறுகிய காலத்தில், பல இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்த ஸ்ரீதிவ்யாவுக்கு, 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திற்கு பின்னர் 5 ஆண்டுகள் எந்த ஒரு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. அவர் நடிக்காமல் இருக்க சில காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் மிகவும் முக்கியமானது பிரபல காமெடி நடிகர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் தான்.
sri divya
அதாவது தன்னுடைய, பணியாற்றிய காமெடி நடிகர் ஒருவரின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ட்ரின்க் பார்ட்டி செய்த ஸ்ரீ திவ்யா குடித்துவிட்டு, கொஞ்சம் ஓவர் அலப்பறை செய்து கொண்டு... அங்கேயே மட்டையாகி விட்டதாகவும், பின்னர் அவரது போதையை தெளிய வைத்து மீண்டும் அவரை காரில் ஏற்றி அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும்... போதும் என ஆகிவிட்டதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
ரோபோ சங்கரை லக்கேஜ் வண்டியில் வைத்து தள்ளிட்டு போகும் மனைவி..
sri divya
இந்த சம்பவத்திற்கு பின்னர், இவருடைய பெயர் டேமேஜ் ஆனது மட்டும் இன்றி, இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. எப்படியும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வரும் ஸ்ரீதிவ்யா 5 வருடங்களுக்கு பின்னர், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'ரெய்டு' படத்தின் மூலம், மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து 'நகர்ப்புறம்' எனும் படத்தில் இவர் நடித்துள்ள நிலையில், விரைவில் இந்த படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
sri divya
தொடர்ந்து தீவிர படவேட்டையில் இறங்கி உள்ள ஸ்ரீதிவ்யா, முக்கிய சபதம் ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது, தான் குடித்ததாக வெளியான தகவலால் பட வாய்ப்பு கையை விட்டு நழுவிய நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடித்த பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.