MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Keerthy Suresh: அடேங்கப்பா... கீர்த்தி சுரேஷுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

Keerthy Suresh: அடேங்கப்பா... கீர்த்தி சுரேஷுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது 3 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நிலையில்... இவருக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீட்டின் மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Jun 10 2024, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை மேனகாவின் மகள் என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் கீர்த்தி சுரேஷ். இவரது தந்தையும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆவர். பெற்றோர் இருவருமே பிரபலங்கள் என்பதால் கீர்த்தி சுரேஷ் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
 

28

2013-ஆம் ஆண்டு  கீதாஞ்சலி என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார். தமிழில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த 'இது என்ன மாயம் 'திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமான நிலையில், இப்படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

37 வயதில்... நீண்ட நாள் காதலனை திருமணம் செய்யப்போகும் ரஜினிகாந்த் பட ஹீரோயின்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

38

எனினும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த 'ரஜினி முருகன்' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் வெற்றி மற்ற மொழிகளை விட தமிழில் இவருக்கான வரவேற்பை அதிகரிக்க செய்தது.
 

48

பின்னர் தனுசுக்கு ஜோடியாக தொடரி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ, தளபதி விஜய்க்கு ஜோடியாக பைரவா, என அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியானார் கீர்த்தி சுரேஷ்.

Suresh Gopi: அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேனா? உண்மை இதுதான்... சுரேஷ் கோபி அதிரடி விளக்கம்!
 

58

கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் கூட, இவரது நடிப்பு, சிரிப்பு, போன்றவை கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அவற்றை தவிடு பொடி ஆக்கிய திரைப்படம் 'மகாநடி' தான். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு மாஸ்டர் பீஸ் ஆக அமைந்தது.
 

68

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தற்போது வரை தனக்கான மார்க்கெட்டை மெயின்டைன் செய்து வரும் கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களையும், கதையின் நாயகியாக நடிக்கும் படங்களையும் மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் ரகு தாத்தா, ரிவால்வல் ரீட்டா, கன்னிவெடி, போன்ற படங்கள் இவரின் கைவசம் உள்ளது.

Charle Son Wedding: நடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
 

78
keerthy suresh

keerthy suresh

தென்னிந்திய மொழியை தாண்டி, 'பேபி ஜான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் தமிழில் வெளியான 'தெறி' படத்தின் ரீமைக்காக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை காளீஸ் என்பவர் இயக்க. இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க எமி ஜாக்சன் நடித்த வேடத்தில் வாமிகா காபி நடிக்கிறார்.
 

88

தன்னுடைய முதல் படத்திற்காக சில ஆயிரங்களே சம்பளமாக வாங்கிய கீர்த்தி சுரேஷ், தற்போது மூன்று கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார். சென்னையில் தளபதி விஜயின் நண்பர் சஞ்சய் வசித்து வரும் அபார்ட்மெண்டில் கீர்த்தி சுரேஷுக்கு சொந்தமாக  ஒரு பிளாட் உள்ளது. இதைத்தவிர பல்வேறு வசதிகளுடன் கூடிய வீடு ஒன்றும் உள்ளதாம். இதன் மதிப்பு சுமார்  6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Karthigai Deepam: அபிராமியை அலறவிட்ட போன் கால்.! கார்த்திக் கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் அப்டேட்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved