திடீரென மெதுவாகச் சுத்தும் பூமியின் உட்கரு! 2010 லயே இப்படி ஆகிருச்சாம்! காரணம் என்ன தெரியுமா?
இந்த 2010ஆம் ஆண்டில் பூமியின் உள் மையக்கரு அதன் வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது என்பதற்கான சான்றுகளை வழங்குகிறது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூமியின் உள் மையக்கரு பகுதி கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது பூமியின் இயக்கவியல் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது என்வும் அவர்கள் கூறுகின்றனர்.
பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை மற்றும் ஒரு நாளின் காலம் இரண்டிலும் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
'நேச்சர்' என்ற பிரபல அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கை, 2010ஆம் ஆண்டில் பூமியின் உள் மையக்கரு அதன் வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது என்பதற்கான சான்றுகளை வழங்குகிறது. இது சுமார் 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேற்பரப்பைவிட குறிப்பிடத்தக்க அளவு மெதுவாக நகர்கிறது.
பூமியின் உட்புற மையக்கரு அதிக வெப்பமான, அதிக அடர்த்தியான இரும்பு மற்றும் நிக்கலால் ஆன கோள வடிவில் உள்ளது. தலைக்குக் கீழே கிட்டத்தட்ட 4,800 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
நர மாமிசம் எல்லாம் சகஜம்! சக மனிதனையே கொன்று உண்ணும் பழங்குடி மக்கள்! எங்க இருக்காங்க தெரியுமா?
ஜான் விடேலும் அவரது சகாக்களும் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி 1991 மற்றும் 2023 க்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தனர். 1971 முதல் 1974 வரையான காலத்தில் நடத்தப்பட்ட சோவியத் அணுசக்தி சோதனைகள், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அணுசக்தி சோதனைகள் தொடர்பான தரவுகளையும் பயன்படுத்தினர்.
''இந்த மாற்றத்தைக் குறிக்கும் நில அதிர்வு வரைபடங்களை நான் முதலில் பார்த்தபோது, நான் திகைத்துப் போனேன். ஆனால் அதே மாதிரியைக் குறிக்கும் பல வரைபடங்களைக் கண்டறிந்தபோது, இது தவிர்க்க முடியாதது எனத் தெரிந்தது. பல பத்தாண்டுகளில் முதல்முறையாக உள் மையக்கரு சுழலும் வேகம் குறைந்துவிட்டது. மற்ற விஞ்ஞானிகளும் சமீபத்தில் இதேபோன்ற வாதித்தை முன்வைத்துள்ளனர். ஆனால் எங்கள் சமீபத்திய ஆய்வு மிகவும் உறுதியான ஆதாரத்தை வழங்குகிறது" என்று ஜான் விடேல் சொல்கிறார்.
பூமியின் காந்தப்புலத்தை உருவாக்கும் சுற்றியுள்ள திரவ வெளிப்புற மையத்தின் கொந்தளிப்பான இயக்கம் மற்றும் மேலோட்டமான பாறையின் அடர்த்தியான பகுதிகளின் ஈர்ப்பு விசை ஆகியவற்றின் காரணமாக உள் மையக்கருவின் சுழற்சி வேகம் குறைகிறது என்று விடேல் விளக்குகிறார்.
இந்த வேகமாறுபாடு இறுதியில் முழு கிரகத்தின் சுழற்சியையும் மாற்றி, பூமியில் நாட்களின் நேரத்தை நீட்டிக்கும். உள் மையக்கருவின் மந்தமான சுழற்சி ஒரு நாளின் நீளத்தை மாற்றக்கூடும். அந்த மாற்றம் ஒரு நொடிக்கும் குறைவான அளவாக இருக்கும் என்று விடேல் சொல்கிறார். ஆனால், "ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு குறைவதை கவனிப்பது மிகவும் கடினம்" எனவும் விடேல் குறிப்பிடுகிறார்.
இந்த ஆராய்ச்சியைத் தொடர்த்து, உள் மையக்கருவின் இயக்கம் எப்படி இருக்கிறு என்று இன்னும் விரிவாக அறிய விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள். உள் மையக்கருவின் சுழற்சி வேகம் ஏன் மாறுகிறது என்பதை சரியாகக் கண்டறிய வேண்டும் எனவும் அது நாம் நினைத்ததைவிட மிகவும் மாறுபட்டதாக இருக்கலாம் என்று விடேல் தெரிவித்துள்ளார்.
ஷூ உருகும் அளவு சுட்டெரிக்கும் வெயில்... 12 நாளில் 1000 கி.மீ. ஓடிய அல்ட்ரா மாரத்தான் வீராங்கனை!