ஷூ உருகும் அளவு சுட்டெரிக்கும் வெயில்... 12 நாளில் 1000 கி.மீ. ஓடிய அல்ட்ரா மாரத்தான் வீராங்கனை!
அதிவேகமாக 1,000 கிமீ தாய்லாந்து-சிங்கப்பூர் அல்ட்ராமரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்த சாதனை படைத்துள்ளார். மேலும், மலேசிய தீபகற்பத்தை ஓடியே வேகமாக கடந்து சென்றதற்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழும் நடாலிக்குக் கிடைக்க உள்ளது.
நடாலி டாவ் என்ற 52 வயதான அல்ட்ரா மாரத்தான் வீராங்கனை சமீபத்தில் தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் முழுவதிலும் பயணித்து 12 நாட்களில் 1,000 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனை நிகழ்த்தியுள்ளார். கடுமையான வெப்பத்திலும் நடாலி டாவ் விடாமுயற்சியுடன், ஒவ்வொரு நாளும் இரண்டு மராத்தான்களுக்கு சமமான தொலைவு ஓடினார். அவரது இந்தப் பயணம் ஜூன் 5ஆம் தேதி சிங்கப்பூரில் நிறைவடைந்தது.
இதன் மூலம் அதிவேகமாக 1,000 கிமீ தாய்லாந்து-சிங்கப்பூர் அல்ட்ராமரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்த சாதனை படைத்துள்ளார். மேலும், மலேசிய தீபகற்பத்தை ஓடியே வேகமாக கடந்து சென்றதற்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழும் நடாலிக்குக் கிடைக்க உள்ளது.
பிபிசிக்கு பேட்டி அளித்துள்ள டாலி, விளையாட்டின் மூலம் கிடைக்கும் சவாலை விரும்புவதால் மாராத்தான் ஓட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவதாக்க் கூறியுள்ளார்.
GRLS என்ற உலகளாவிய தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக இந்த ஓட்டத்தைத் தொடங்கியதாகவும், அல்ட்ரா மாரத்தான் முடிவில் 50,000 டாலருக்கும் மேல் நிதி திரண்டுள்ளது என்றும் நடாலி டாவ் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்தே மாதம் ரூ.9,250 வருமானம்! நேரா போஸ்ட் ஆபிஸ் போய் இந்தத் திட்டத்தில் சேருங்க!
டாவின் பயணம் எளிதானதாக இல்லை. 35 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலையில் ஓடியிருக்கிறார். இதனால் அவர் காலில் அணிந்திருந்த ஷூ உருகிவிட்டது. முதல் நாளிலிருந்தே அவர் இடுப்பில் காயத்துடன்தான் ஓடினார். 3ஆம் நாளில், அவளுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டது. இருப்பினும், டாவ் இந்த சவால்களைக் அநாயாசமாக எதிர்கொண்டார். ஒவ்வொரு நாளும், குறைந்தது 84 கிலோமீட்டர்களைக் கடந்து சென்றாள்.
"ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருப்பது பயங்கரமாக இருக்கும். சோர்வு மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள கொப்புளங்களால் பயணத்தைத் தொடர முடியாமல் போய்விடுமோ என்று அச்சம் ஏற்படும். ஆனாலும் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்" என்றும் சொல்கிறார் நடாலி. இதுபோன்ற உணர்வுபூர்வமான சவாலையும் கடந்துதான் அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
"முதலில் வந்தாலும் கடைசியாக வந்தாலும் பரவாயில்லை. உலக மக்கள்தொகையில் 0.05% பேர் செய்யாத ஒன்றை செய்வதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது" என்று அவர் கூறினார்.
இரண்டே நாளில் சாகடிக்கும் அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா! ஜப்பானில் பரவுவதாகத் தகவல்!