- Home
- Gallery
- 37 வயதில்... நீண்ட நாள் காதலனை திருமணம் செய்யப்போகும் ரஜினிகாந்த் பட ஹீரோயின்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
37 வயதில்... நீண்ட நாள் காதலனை திருமணம் செய்யப்போகும் ரஜினிகாந்த் பட ஹீரோயின்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஜாகீர் இக்பால் என்பவரை இந்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா மற்றும் நடிகை பூனம் சின்காவின் மகள் தான் சோனாக்ஷி. ஒரு ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் சோனாக்ஷி, பின்னர் தபாங் திரைப்படத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ப்லிம் ஃபேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் பெற்றார்.
ஆடை வடிவமைப்பாளராக இருந்தபோது மிகவும் குண்டாக இருந்த சோனாக்ஷி, நடிகையாக வேண்டும் என அதிரடியாக 30 கிலோ எடையை குறைத்து சிக்கென மாறினார். இதை தொடர்ந்து நடிகை பிரபு தேவா ஹிந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக இவர் நடிக்க அந்த படம் முதல் நாளே 15 கோடி வசூலை தட்டி தூக்கியது. 2012-ஆம் ஆண்டு மட்டுமே இவர் நடிப்பில், 5 படங்கள் வெளியாகி இவரை படு பிஸியான நாயகியாக மாற்றியது.
Suresh Gopi: அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேனா? உண்மை இதுதான்... சுரேஷ் கோபி அதிரடி விளக்கம்!
ஹிந்தியில் படு பிசியாக நடித்து கொண்டிருந்த போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த லிங்கா படத்தில்... தலைவருக்கு நாயகியாக நடித்தார். இப்படம் அதிக படியான விமர்சனங்களுக்கும் ஆளானது. காரணாம் மகளை விட குறைந்த வயது பெண்ணுடன் ரஜினிகாந்த் ஜோடி சேர்ந்தது தான். இந்த படத்திற்கு பின்னர்... ரஜினிகாந்த் வயதில் மூத்த நடிகைகளுடன் ஜோடி போட துவங்கினார்.
தற்போது நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு 37 வயதாகும் நிலையில்... ஒருவழியாக தன்னுடைய காதலரை கரம்பிடிக்க தயாராகியுள்ளார். ஜாகீர் இக்பால் என்கிற துணை நடிகருடன் இவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார். இதை தெடர்ந்து இவர்களுக்கு ஜூன் 23ஆம் மும்பையில் மிகப்பிரமாண்டமாக மும்பையில் உள்ள பாஸ்டியனில் திருமண விழா நடைபெறவுள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் அனைவருமே ட்ரடிஷனல் உடையில் வர வேண்டும் என கேட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ரசிகர்கள் பலர் தொடர்ந்து சோனாக்ஷிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.